இனி வாட்ஸ்அப்பில் மின் கட்டணம், ரீசார்ஜ், கேஸ்புக்கிங், லோன் கட்டணம், பாஸ்டேக் உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்தலாம்...
இனி வாட்ஸ்அப்பில் மின் கட்டணம், ரீசார்ஜ், கேஸ்புக்கிங் லோன் கட்டணம் பாஸ்டேக் உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்தலாம்...
மத்திய அரசின் 'Bharat Connect' தளத்தின் வாயிலாக வாட்ஸ்அப் செயலியிலேயே பயன்பாட்டுக் கட்டணங்களை நேரடியாகச் செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம், சமையல் எரிவாயு (LPG), FASTag, காப்பீடு மற்றும் கடன் தவணை உள்ளிட்ட 30 முக்கிய பிரிவுகளில் உள்ள 22,722-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கட்டணங்களை மக்கள் இதன் மூலம் செலுத்த முடியும்.
வாட்ஸ் அப்பயனர்கள் தங்களது கட்டணங்களை UPI, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய வசதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வாட்ஸ்அப்பில் என்னென்ன கட்டணங்களைச் செலுத்தலாம்?
BBPS நெட்வொர்க் மூலம் கிடைக்கும் மின்சாரம், தண்ணீர், குழாய்வழி எரிவாயு, FASTag, மொபைல் மற்றும் DTH ரீசார்ஜ்கள், காப்பீட்டு பிரீமியங்கள், கிரெடிட் கார்டு கட்டணங்கள், கடன் திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் பல
எப்படி பயன்படுத்துவது..?
உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.முகப்புத் திரையின் மேலே உள்ள ₹ (பணம் செலுத்துதல்) ஐகானைத் தட்டவும்.
மின்சாரம், தண்ணீர், எரிவாயு, ஃபாஸ்டேக் அல்லது கிரெடிட் கார்டு போன்ற கட்டண வகையைத் தேர்ந்தெடுக்கவும் சரிபார்க்கவும்.
Tags: தொழில்நுட்பம்
