Breaking News

3 நாட்கள் தொடர் வங்கி விடுமுறை அனைத்து ஏ.டி.எம்.களிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்- பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 3 நாட்கள் தொடர் வங்கி விடுமுறை அனைத்து ஏ.டி.எம்.களிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்- பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு

ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக 3 நாட்கள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் (செப்டம்பர் 28-30) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 

டெபாசிட், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம். இணையதள வங்கி சேவை, ஏ.டி.எம். மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 நாட்களிலும் எந்த வங்கி ஏ.டி.எம். மூலமும் கூடுதல் கட்டணமின்றி பணம் எடுக்கலாம், வழக்கமான மாதாந்திர இலவசப் பரிவர்த்தனை வரம்பும் பொருந்தாது. தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளும் பணத் தேவைக்காக ஏ.டி.எம்.களை பயன்படுத்திக்கொள்ளலாம் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback