Breaking News

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்! முழு விவரம்



த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றிருப்பதால், விவாகரத்து வழக்கு தொடர்பாக அவர் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து,  புதிய திருப்பமாக, தான் தொடர்ந்த விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சங்கீதா நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் ஆஜரான அவர், இந்த வழக்கை தொடர விருப்பமில்லை என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம் சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கினை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback