Breaking News

மாற்றி யோசி ஐஐடி மெட்ராஸ் வழங்கும் இலவச கணிதப் பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் iit madras free maths courses

அட்மின் மீடியா
0
மாற்றி யோசி ஐஐடி மெட்ராஸ் வழங்கும் இலவச கணிதப் பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்



மாணவர்களின் பகுப்பாய்வுச் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனை மேம்படுத்தும் 'அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்' (OOBT) இலவச கணிதப் பயிற்சித் திட்டத்திற்கு ஐஐடி மெட்ராஸ் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

இந்த பயிற்சி திட்டத்தில் புதுமை சிந்தனை, டிசைன் திங்கிங், செயற்கை நுண்ணறிவு (AI), தலைமைத்துவ திறன், கணித அறிவு மேம்பாடு மற்றும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.



கற்றலில் ஆர்வமுள்ள எவரும் இந்த இலவசப் பயிற்சித் திட்டத்தில் இணையலாம். பயிற்சி ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்குகிறது; விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6-ஆம் தேதி கடைசி நாள். மாணவர்கள் வாரத்திற்கு 2 மணி நேரம் வீதம், 10 வாரங்கள் இணையவழியில் பயிற்சி பெற வேண்டும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் பதிவுசெய்ய : https://iitmpravartak.org.in/out-of-box-thinking

பயிற்சியை நிறைவு செய்த பிறகு, விருப்பமுள்ளவர்கள் மட்டும் ஆன்லைன் தேர்வில் பங்கேற்று ஐஐடி பிரவாரக் சான்றிதழ் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

பயிற்சி மற்றும் கற்றல் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும் நிலையில், சான்றிதழ் பெறுவதற்கான தேர்வு விருப்ப அடிப்படையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Give Us Your Feedback