முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது..!!!
முதல்வர் விஜய் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் கைது
கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான சி. ஜோசப் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் அவர் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமைதியைக் குலைத்தல், மோதலைத் தூண்டுதல் (BNS பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் காவல்துறை தன்னை எந்த நேரத்திலும் கைது செய்ய நேரிடும் என்பதால், தனக்கு முன் பிணை வழங்கக்கோரி, அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
தனது பேச்சுக்கு அவதூறு வழக்குதான் தொடர வேண்டுமே தவிர, காவல்துறை வழக்கு பதிவு செய்ய முடியாது என்று அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.இதற்குப் பதிலளித்த காவல்துறை, ஏழு முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த மனுதாரர் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் பேசியிருக்க வேண்டும் என்று வாதிட்டது.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "1967-ஆம் ஆண்டிற்குப் பின் தமிழகத்தைத் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சி செய்திருக்கிறார்கள்; எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் ஏன் இதுபோலப் பேச வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
Tags: அரசியல் செய்திகள்
