Breaking News

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதா முழு விவரம்

அட்மின் மீடியா
0

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனைக்குரிய குற்றமாக கருத வகை செய்யும் தேசிய கெளரவம் அவமதிப்பு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்



வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது என்றாலும்வந்தேமாதரம் தேவி பகவதி என ஆதிசங்கரர் தான் முதன் முறையாக இறைவியைப் புகழ்வதற்காகப் பாடினார்.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், God Save the Queen என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலைக் கட்டாயமாக்கினர். பங்கிம் சந்திரர், இப்பாடலைத் தான் புலமை பெற்றிருந்த வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார். 

னினும், முதலில் இப்பாடலில் உள்ள சில சொற்களை உச்சரிப்பதில் இருந்த சிரமங்களால் இப்பாடல் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இப்பாடல், 1882-இல் பங்கிம் சந்திரர் எழுதி வெளியிட்ட ஆனந்தமடம் (வங்காள மொழியில் Anondomott என்று உச்சரிக்கப்படுகிறது) என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும், இப்பாடல் 1876-இலேயே எழுதப்பட்டுவிட்டது. அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்தார்.

இந்நிலையில் வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் கடும் தண்டனை வழங்கும் வகையில் மசோதா தாக்கலாகி உள்ளது; வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback