ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 2 நாட்களில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 2 நாட்களில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு
ஆதிதிராவிடர்களுக்கு 2 நாளில் சாதி சான்றிதழ். வழங்கவும் பழங்குடியினருக்கு ஒரு வாரத்தில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். காலதாமதம் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை.'' - சமூக நீதித்துறை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இனச்சான்று வழங்குவது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை ஒன்றிணைத்து "Manual for issuance and verification of Scheduled Caste/Scheduled Tribe Community Certificates" வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பிரிவு 3.9-இல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனச்சான்று கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் மீது ஆதிதிராவிடர் இனத்தவருக்கு இரண்டு நாட்களுக்குள் வட்டாட்சியராலும், பழங்குடியினத்தவருக்கு ஒரு ஊார காலத்திற்குள் கோட்டாட்சியராலும் இனச் சான்று வழங்கப்பட வேண்டும். ஐயம் ஏற்படும் நேர்வுகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அம்மனுக்களின்மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை மனுதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
2. ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனச்சான்று கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்கள்மீது சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக அரசிற்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது.
3. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனச்சான்று கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் மீது ஆதிதிராவிடர் இனத்தவருக்கு இரண்டு நாட்களுக்குள் வட்டாட்சியராலும், பழங்குடியினத்தவருக்கு ஒரு வார காலத்திற்குள் கோட்டாட்சியராலும் இனச்சான்று வழங்கப்பட வேண்டும். ஐயம் ஏற்படும் நேர்வுகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அம்மனுக்களின்மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விரைத்தினை மனுதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அங்ஙனம் உரிய நடவடிக்கை எடுக்காமலிருக்கும் சான்றிதழ் வழங்கும் அலுவலர்களின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சான்றிதழ் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தங்களை வெளியிடுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.என்று உத்தரவிடப்பட்டுள்ளது
அரசின் இந்த நேரடி வழிகாட்டுதல்கள் மூலம் சான்றிதழ் கோரி நீண்ட காலம் அலைக்கழிக்கப்படும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ் வழங்காமல் தேவையற்றக் காலதாமதம் செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியம் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இந்த அதிரடி உத்தரவு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
