ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் முறை ஆக.17 முதல் நடைமுறைக்கு வரும் - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு anywhere registration
ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் முறை ஆக.17 முதல் நடைமுறைக்கு வரும் - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு anywhere registration
காகிதமில்லா ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் எங்கிருந்தும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமலேயே பத்திரப்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
கட்டாயமான முதல் விற்பனை (First Sale): கட்டுமான நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் மனைகளின் முதல் விற்பனை (Plot) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை (Flat) ஆகிய ஆவணங்கள் முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யப்பட வேண்டும் முழுக்க முழுக்க ஆன்லைன்.. தமிழ்நாட்டில் அமலுக்கு வரும் காகிதமில்லா பத்திரப்பதிவு - யாருக்கெல்லாம் கட்டாயம்?. இதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை முழுக்க முழுக்க ஆன்லைன்..
மீதமுள்ள 18 வகையான ஆவணங்களை விருப்பத்தின் பேரில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது வழக்கம் போல சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ பதிவு செய்து கொள்ளலாம் முழுக்க முழுக்க ஆன்லைன்.. தமிழ்நாட்டில் அமலுக்கு வரும் காகிதமில்லா பத்திரப்பதிவு - யாருக்கெல்லாம் கட்டாயம்?.எங்கிருந்தும் பதிவு செய்யும் முறை (Anywhere Registration): தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும், எந்தவொரு சார்பதிவாளர் அலுவலக எல்லையின் கீழ் வரும் சொத்தையும் ஆன்லைன் வழியாக பதிவு செய்யலாம்
பத்திரப்பதிவு முடிந்தவுடன், டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய ஆவணம் (PDF வடிவம்) உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்
தமிழகத்தில் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு முறை அமல். எங்கிருந்தாலும், முழுவதும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யலாம்.பத்திரப்பதிவு துறையில் இடைத்தரகர்களை அனுமதிக்க மாட்டோம். ஆன்லைன் முறையிலேயே அனைத்து பதிவுகளையும் மேற்கொள்ள முடியும். ஆன்லைன் முறையால் 30% மக்கள் பத்திரப்பதிவு அலுவலகம் வருவது குறையும். ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார்.
முதல்முறை நிலம், வீடு வாங்குவோருக்கு அவற்றை விற்பவர்கள் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் anywhere registration முறையும் அன்று முதல் அமலாகும். நிலங்களுக்கான வழிகாட்டுதல் மதிப்பை அதிகரிப்பது குறித்து குழு அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசித்துள்ளோம்.பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்பதை உறுதி செய்வதற்காக, நாங்கள் கடந்த சில நாட்களாக எடுத்த முயற்சிகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிபடி, சுத்தமான அரசாங்கம் நடத்த வேண்டும் என முதல்வர் எங்களை எல்லாம் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்.” என்றார்.
Tags: தமிழக செய்திகள்
