திருச்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பேசியது என்ன முழு விவரம் வீடியோ இணைப்பு
திருச்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பேசியது என்ன முழு விவரம் வீடியோ இணைப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய்,
என் நெஞ்சில் குடியிருக்கும்’ தமிழக மக்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கமும் நன்றிகளும்…
குறிப்பாக திருச்சி கிழக்கு மக்கள் அனைவருக்கும் என்னுடைய சிறப்பு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னை இப்போது பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ என்று தான் சொல்வார்கள். இது தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிப்படி சொல்கிறார்கள்.
என்னை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுக்கு திருச்சி என்பது எப்படி ஒரு இதயம் மாதிரியோ, அதுபோல என்னுடைய இதயத்துக்கு திருச்சி கிழக்கு மக்களும் ரொம்ப ரொம்ப நெருக்கமானவர்கள் தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது.கல்யாண வீட்டில் புலம்பல்ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை. ஆறு மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம் அரை மணி நேரத்திலேயே ஆரம்பித்து விட்டார்கள்.பாவம் ஒரு கல்யாண வீட்டில் எல்லாம் சென்று புலம்பிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.
ஒன்றுக்கு பின் ஒன்றாக நான் சொன்னதெல்லாம் நடக்கிறதா?…இத்தனை ஆண்டுகளாக மாறி மாறி உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்த இந்த இரண்டு பேரையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த இந்த விஜயை, உங்கள் அண்ணனை உங்கள் தம்பியை முதலமைச்சராக… இல்லை இல்லை முதல் சேவகனாக ஆக்கியிருக்கிறீர்கள்.
இந்த நேரத்தில் தலைவணங்கி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நேரத்தில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை இயக்கங்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்ஜிஆர் முதல் தேர்தலில் கூட இந்த அளவுக்கு ஒரு வாக்கு சதவிகிதம் வாங்கவில்லை என்று நிறைய பேர் சொன்னார்கள்.அப்படி தமிழக வெற்றி கழகத்தை நிறைய பேர் ஆதரித்திருக்கிறீர்கள். எம்ஜிஆரோடு நான் ஒப்பிடவில்லை. எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்.ஆனால் பெரியார் எம்ஜிஆர் அண்ணா வழியில் அன்பாக உங்களுக்காக உழைக்க வந்திருக்கிறேன்.
1977ல் நீங்கள் போடாத ஓட்டை 2026 இல் போட்டிருக்கிறீர்கள்.என்ன ஒன்று, இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்திருந்தீர்கள் என்றால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.பரவாயில்லை, இனிவரும் எல்லா தேர்தல்களிலும் உங்களுடைய முழு ஒத்துழைப்பையும் என்னால் வாங்க முடியும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.
ஏனென்றால் நீங்கள் அமைத்துக் கொடுத்திருக்கக்கூடிய இந்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் கண்கூடாக பார்ப்பீர்கள்.இதை மட்டும் நிறுத்திடாதீங்கயார் எந்த நிலைமைக்கு போனாலும் இந்த கிண்டலும் கேலியுமாக பேசுவது இருக்கத்தான் செய்யும்.நம்மைப் பற்றி நம் அரசியலைப் பற்றி கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த நிலையில் என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள் இதுதான். தயவுசெய்து இதை எப்போதும் நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து கொண்டே இருங்கள்.நீங்கள்தான் என்னுடைய எனர்ஜி போர்சே. நீங்கள் இப்படி பேசிக் கொண்டே இருங்கள். நான் மக்களுக்கான நல்லதை மட்டும் செய்து கொண்டே இருப்பேன். செய்து கொண்டே இருப்பேன்.
இப்போது நாம் புதிதாக சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு வருகிறோம். இதையும் விமர்சிக்கிறார்கள். ஏன் நாமெல்லாம் கோட் சூட் போடக்கூடாதா?அதிகாரம் செய்பவர்களும் ஆதிக்க சக்திகளும் தான் கோட் சூட் போட வேண்டுமா என்ன? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது?நான் என்ன கலர் கலராகவா போட்டுக் கொண்டு வருகிறேன்… நமது மனது மாதிரியே பிளாக் அண்ட் வொயிட் நிறத்தில் போடுகிறேன்.எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் வொயிட் ஆக இருப்பேன் என்பதை காட்டுவதற்காக தான் இந்த கலரை தேர்வு செய்து இருக்கிறேன்.
இந்த பிளாக் கலர் கூட யாரைக் குறிக்கும் எதைக் குறிக்கும் என்பதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்று அவசியமில்லை. அது உங்களுக்கே தெரியும்.எல்லாவற்றுக்கும் இப்படி விளக்கம் சொல்லிக் கொண்டு நசநச என பேசும் டைப் நாம் கிடையாது. உங்களுக்கே தெரியும் அனைத்தும் மீட்டிங்கிலும் 20 நிமிடங்களுக்குள் தான் நான் பேசி இருக்கிறேன்.அதனால் இப்போது மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், நீ எங்களுக்காக உழைப்பதற்காக வந்திருக்கிறாய். அந்த வேலையை மட்டும் பார், உன்னைப் பற்றி பேசுபவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள்.
இப்போது என்ன, எனக்கு எதிரிகளே இல்லையா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அப்படி நினைக்கவும் மாட்டேன் நினைக்கவும் கூடாது.இப்போதும் சொல்கிறேன் இரண்டே இரண்டு பேருக்கு மத்தியில் தான் போட்டியே… ஒன்று டிவிகே இன்னொன்று டிஎம்கே. இதற்கு நடுவில் வேறு யாருக்கும் எந்த வேலையும் கிடையாது.ஏதாவது இருக்கும் என சொல்கிறீர்களா?தேர்தலுக்கு முன்னும் அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை… தேர்தலுக்குப் பின்னால் இப்போது சுத்தம் எதுவும் இல்லை.என்னென்ன கூத்து…ஆனால் இந்த திமுகவும் மற்றும் பலரும் சேர்ந்து கொண்டு இந்த விஜய் வந்து விடக்கூடாது என்று சொல்லி ஒரு கூத்து ஒன்று நடத்தினார்களே. அட அட அட….இப்படி எல்லாம் நடக்குமா… என்ன கூத்து எல்லாம் நடந்தது.ஆனால் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நான் இப்போது சொல்கிறேன்.உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த இந்த விஜயா இல்லை இந்த விஜயோட ஆட்சி அமைந்து விடக்கூடாது என்று தடுக்க நினைத்த ஸ்டாலின் சாரா? அவ்வளவுதான்.இதற்கு நடுவில் எந்த அல்லு சில்லும் உள்ளே வந்து தடுக்க நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பில்லை.
ரிசல்ட் என்னவாக வரும் என்று உங்களுக்கே நன்றாக தெரியும்? நம்மை ஏளனமாக பேசுவதாக நினைத்து அவர்களே அவர்களுக்கு ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்.திமுக நம்மை தடுக்க தடுக்க, எதிர்க்க எதிர்க்க, அவமானப்படுத்த படுத்த அத்தனையும் நமக்கு நன்மையே.ஒன்று கவனித்தீர்களா. நாம் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த Gen-z தலைமுறையை கவர்வதற்காக, ஆங்கிலம் தமிழ் கலந்த அறிக்கை வருகிறது. இதை சொல்ல வந்தேன் என்று நினைக்கிறீர்களா. இது கிடையாது.ரியாலிட்டியை மறந்துவிட்டு ரீல்ஸ் போடுவதை சொல்ல வந்தேன் என்று நினைக்கிறீர்களா அந்த காமெடியும் கிடையாது.சீரியஸான ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. முன்னதாக சட்டசபையில் யார் பேசினால் நமக்கு என்ன, யார் அடித்துக் கொண்டால் நமக்கு என்ன என்று இருந்த கூட்டம் எல்லாம் இப்போது சட்டசபையில் என்ன நடக்கிறது என்ன பேசுகிறார்கள் என்பதை எல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக ஸ்டைலிலேயே இதை சொல்ல வேண்டும் என்றால் ரீல்ஸ் போட்ட கூட்டம் எல்லாம் இப்போது நியூஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இதில் நமக்கு சந்தோஷம்தான்… பெருமைதான். நம்முடைய இளைஞர்கள் பெண்கள் எல்லாம் அரசியல் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் யாரால் நடந்தது என்று நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு அது தெரியும்.இப்படிப்பட்ட நம் தெய்வங்களை மக்களை தற்குறி என்று சொல்கிறார்கள். இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் தற்குறி தற்குறி என்று விமர்சித்தவர்கள் தான் இன்று உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள்.அன்று நான் சொன்ன போது சிரித்தவர்கள் எல்லாம் இன்று என்ன செய்யப் போகிறார்களோ?உண்மையை சொன்னால் அந்த கூட்டத்துக்கு தான் கசக்குமே? உண்மையிலேயே மக்கள் மனதை நீங்கள் புரிந்து வைத்திருந்தீர்களானால், நீங்கள் இப்படி மக்களை தவறாக பேசியிருக்க மாட்டீர்கள்.அரசியல் புரிதல் இல்லாமல் மக்கள் நமக்கு ஓட்டு போட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
கவர்ச்சியில் மயங்கி ஓட்டு போட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.நான் என்ன…சரி விடுங்க…அவர்களுக்கு வாக்கு செலுத்தினால் மக்கள் நல்லவர்கள்… நமக்கு வாக்கு செலுத்தினால் கெட்டவர்கள் தற்குறிங்களா?அண்ணன் விஜயகாந்த்இவர்கள்தான் இத்தனை வருடங்களாக உங்களுக்கு வாக்கு செலுத்திக் கொண்டிருந்தார்கள். உங்களுக்கு மட்டும் என்ன வேறு ஏதாவது பிளானட்டில் இருந்து குதித்து வாக்கு போட்டார்களா?தற்குறியாமே தற்குறி…. நல்லா வருகிறது…. வேண்டாம் என்று பார்க்கிறேன்.
எங்கள் அண்ணன் விஜயகாந்த் சொல்வது போல, அண்ணா தொடங்கிய கட்சியை அடிமை கூடாரமாக்கியது யார்?இப்படி எல்லாம் ஆக்கிவிட்டு உண்மைய சொல்லு உடன்பிறப்பே என்று கேட்கிறார்கள்.உங்களுடைய உண்மையான உடன்பிறப்பே என்ன சொல்கிறார்கள் தெரியுமா, திமுக இப்படி ஆனதற்கான காரணத்தை வெளியில் போய் தேடாதீர்கள் உங்கள் குடும்பத்திலேயே கேளுங்கள் என்கிறார்கள்.உங்களுக்காக மாடாக உழைத்து தேய்ந்து போய் கிடக்கிறோம், உழைக்காமல் இருக்கும் உங்கள் குடும்பத்துக்குள்ளேயே போய் கேளுங்கள் என்று ஒவ்வொரு திமுக தொண்டரும் சொல்கிறார்கள்.இது தெரியாமல் நம்மையும் நமது மக்களையும் தப்புத்தப்பாக பேசுகிறார்கள்.நீங்கள் மக்களைப் பற்றி தவறாக பேசினீர்கள் என்றால் இந்த விஜய் கேள்வி கேட்பான்சும்மா இருக்க மாட்டான்.
இந்த விஜய்யும் தமிழ்நாட்டு மக்களும் வேறு வேறு அல்ல. இந்த விஜய் தான் தமிழ்நாட்டு மக்களின் உண்மையான ஒரே பிரதிநிதி. இன்றைக்கும் நாளைக்கும் எப்போதும் இது தான் நிஜம்.மறுபடியும் சொல்கிறேன், நமக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் இந்த பூர்வ ஜென்ம பந்தத்தை உறவை சதிகள் சூழ்ச்சிகள் செய்து யாராலும் எடுக்கவே முடியாது.
நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன சதிகள் என்ன சூழ்ச்சிகள் எல்லாம் செய்தீர்கள்.எப்படி எல்லாம் தடுக்க வேண்டும் என்று முயன்றீர்கள்.ஆனால் இப்போது சாமானிய மக்களாட்சி வந்துள்ளது.நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பழைய டெக்னிக்கை பயன்படுத்துவீர்கள். அதையெல்லாம் பயன்படுத்தி என்னையும் மக்களையும் பிரிக்கலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அது ஒருபோதும் நடக்காது.மக்கள் எல்லாம் ரொம்ப தெளிவாகி விட்டார்கள். அதனால் ஒரு ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்பட்டு மக்கள் மனதை வெல்ல பாருங்கள்.கடைசி ஒரு மாதங்களாக நடக்கும் ஒரு சில விஷயங்களை உங்களிடம் பகிர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
100 யூனிட் மின்சாரம் திமுக கொடுத்ததல்லஇந்த 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் அறிவித்தோம் . இதில் ஏற்கனவே இருந்த 100 யூனிட் இலவச மின்சார திட்டம் திமுக கொடுத்தது கிடையாது,ஜெயலலிதா மேடம் கொடுத்தது. ஸ்டாலின் சார் பதவி போன அந்த கடுப்பில் அறிக்கையாக விட்டு தள்ளிக்கிட்டு இருக்கிறார்.மக்கள் பணத்தை டாஸ்மாக்கில் இருந்து கொள்ளையடித்த அந்த பணத்தை, ஊழல்செய்த அந்த ஃபைலை குளோஸ் செய்ய வேண்டும் என்று அலையா அலைந்தீர்கள். ஆனால் இந்த விஜய் மக்களுக்கு தொந்தரவாக இருக்கும் அந்த டாஸ்மாக்கை மூடினான்.விவசாயிகளோட அந்த கடனை தள்ளுபடி செய்தான். அதிகபட்சமாக இந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்திருக்கிறார்.
நீங்கள் தான் அந்த நிதி சம்பந்தமாக இருக்கிற எல்லா கேட்டையும் மூடி வைத்துவிட்டு சென்றிருக்கிறீர்களே. அதை சரி செய்ய வேண்டாமா? அதை ஒழுங்குப்படுத்த வேண்டாமா?அதனால் மறுபடியும் சொல்கிறேன். இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு அரசியலுக்கு வரவில்லை. உங்கள் கூடவே நிற்பதற்கு மட்டும்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. கவலையே படாதீர்கள் விவசாய பெருமக்களே.அடுத்து இந்த சட்டம் ஒழுங்கு… அது சரியில்லை, இது சரியில்லை என சொல்லி திமுக-வும் மற்றும் பலரும் மாறி மாறி கூவுகிறார்கள். நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். இந்த மாடல் அரசு மாடல் அரசு என்று சொல்கிறீர்களே, அதில் என்ன செய்து வைத்துவிட்டு சென்றிருக்கிறீர்கள்.ஒரு ஊர் விடாமல், தெரு விடாமல் போதைப்பொருள் கலாச்சாரத்தை பரப்பி வைத்திருக்கிறீர்கள்.
அதை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தியிருந்தால் இத்தனை பெண் குழந்தைகளை, பெண்களை இழக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்குமா?. எல்லாவற்றையும் செய்துவிட்டு பழியை தூக்கி என் மீது போடுகிறார்கள்.நீங்கள் என்ன பழி போட்டாலும், மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய அந்த செயலை கண்டிப்பாக இந்த விஜய் செய்து காட்டுவான். அதுக்காகத்தான் எஃபிஷியன்ட்டான போலீஸ் அதிகாரிகளை நான் நியமித்திருக்கிறேன்.
பெண்கள் பாதுகாப்புக்காக “சிங்கப்பெண் காவல் படையை அடுத்த வாரம் தொடங்கி வைக்கப்போகிறோம். தவறு செய்தவர்களுக்கான தண்டனை, குற்றப்பத்திரிகை எல்லாமே வேகமாக செய்வதற்கான அந்த வேலையை செய்ய சொல்லியிருக்கிறோம். நீதிமன்றத்தில் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கான வேலையையும் விரைவாக செய்ய சொல்லியிருக்கிறோம்.இப்படியெல்லாம் நாம் சொல்வதால், இவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?வேரில் வெந்நீரை ஊற்றிவிட்டுப் போனவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் பின் என்ன செய்வது? இதையெல்லாம் மக்களிடம் நாம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நமது, மக்களுக்காக இவ்வளவு வேலை பார்க்கிறோம். ஆனால், இவர்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு “குதிரை பேரம் செய்கிறார், அதை செய்கிறார், இதை செய்கிறார்? என்று தப்புத் தப்பாக கதையெல்லாம் அடித்துவிட்டு… இந்தத் தீய சக்தியும், தீந்து போன சக்தியும்… அதாங்க, திமுக-வும் மற்றும் பலரும் ஒன்றாக சேர்ந்து, திருட்டுத்தனமாக யாருக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக மூலையில் உட்கார்ந்து பேரம் பேசி, கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து கொள்ளையடிக்கத் திட்டம் போட்டார்கள்.அது ஏன் தெரியுமா? உங்களுடைய இந்த தவெக ஆட்சி அமைந்தால் அவர்களின் பிழைப்பே போய்விடும். அதுதான், கொள்ளையடிக்கிறது, லஞ்சம், ஊழல் எல்லாமே கதம் கதம்… அதுதான் இந்த காரணம்.
அடுத்து ஸ்டாலின் சார், திமுக வந்து இப்போது தீய சக்தி மட்டுமில்லை, மக்களை விட்டு ரொம்ப தூரமாகப் போன தூர சக்தி, ஓர சக்தி, கோர சக்தி, பார சக்தி!நீங்கள் எப்போது இந்தத் தீந்து போன சக்தியோடு கூட்டு சேர்ந்துகொண்டு ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ, அப்போதே இந்தத் திமுக தூர்ந்து போன சக்தியாகவும் ஆகிவிட்டது.நீங்களெல்லாம் நம்மளைப் பற்றி அவதூறு பேசலாமா சார்? இது நியாயமா?மக்களே, இவ்வளவு பெரிய மக்கள் சக்தி நம்மளோடு இருக்கும்போது நமக்கு எதற்கு பேர அரசியல்? தேர்தலில் 50, 60 வருஷமாக இருந்த சாதியை உடைத்திருக்கிறோம், மதத்தை உடைத்திருக்கிறோம், காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை உடைத்திருக்கிறோம்! நாம் எது செய்தாலும் கான்ஸ்டிடியூஷனில் தான் செய்வோம்.நாம் சிங்கிள் மெஜாரிட்டி வாங்கி இருந்தாலும், நம்மை நம்பி முறையாக கூட்டணியில், கட்சியில் ஆதரிக்க வருபவர்களை அரவணைத்துத்தான் இருப்போம். நான் இப்போதும் மீண்டும் டிக்ளேர் செய்கிறேன்,
டிவிேக ஆட்சி எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாருக்குமான ஒரு ஆட்சியாகத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஸ்டாலின் சார் மாதிரி ஊசலாட்டம் இருக்கவே இருக்காது.மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமே இல்லை, மாநில உரிமைகளில் விட்டுக்கொடுக்கவே மாட்டோம், நதிநீர் உரிமைகளை விட்டுக்கொடுக்கவே மாட்டோம், சமூக நீதி, சம நீதி, சமத்துவ நீதியை ஒருநாளும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம்!
திருச்சி கிழக்கு தொகுதி மக்களே… தமிழ்நாட்டில் இருக்கிற 234 தொகுதியும் நம்ம தொகுதிதான். அதில் எந்தக் கட்சி ஜெயித்திருந்தாலும் அது நம்ம தொகுதிதான். பெரம்பூராக இருக்கட்டும், திருச்சி கிழக்காக இருக்கட்டும், எனக்கு இரண்டு கண்கள் மாதிரி! அதிலும் திருச்சி கிழக்கு என் செல்லப் பிள்ளை மாதிரி!உங்கள் வீட்டு வேட்பாளர் வரப்போகிற இடைத்தேர்தலில் உங்க வீட்டில் இருக்கிற ஒருத்தரை, உங்களில் ஒருத்தரைத் தான் வேட்பாளராக நிற்க வைக்கப் போகிறோம். நீங்கள் எப்படி இந்த விஜய்க்கு ஆதரவு கொடுத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்களோ, அதேமாதிரி வரப்போகிற இடைத்தேர்தலில் உங்களுடைய அந்த வேட்பாளரையும் ஜெயிக்க வைப்பீர்கள் என்ற அந்த ஒரு நம்பிக்கையை நான் முழுமையாக நம்புகிறேன்.
உங்களுக்காக உழைக்க வந்திருக்கிறேன், உங்களுக்காக எல்லா விஷயத்தையும் நான் பார்த்துப் பார்த்துச் செய்வேன். ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஒரு ஆட்சியை நான் கொடுப்பேன். எனக்கு புரிகிறது, ஒரே நாளில் அது நடக்காதுதான், அது மேஜிக்இல்லை. என்றாலும் ஒரு நாள் அதை நான் நடக்க வைப்பேன்!
எனக்கு இப்போது வேறு எந்த வேலையும் இல்லை, உங்களுக்காக உழைப்பதைத் தவிர. “என் கடமை எல்லாம் இனி என் மக்களுக்குப் பணி செய்துவதுதான்என்னை வெற்றி வைத்த தமிழக மக்களுக்கும், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கான்ஃபிடென்டா இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்! மீண்டும் சந்திப்போம்” என்று உரையாற்றினார்.Photo of authorKavi
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/live/xUTkWS3pdCk?si=4cZwo2V-89djnPBv
Tags: தமிழக செய்திகள்
