Breaking News

டிரைவிங் லைசென்ஸ் ஒரு முறை எடுத்தா போதும் 50 வயது வரை ரினிவலுக்கு அலைய தேவையில்லை! மத்திய அரசு கொண்டு வரும் புது நடைமுறை!

அட்மின் மீடியா
0

டிரைவிங் லைசென்ஸ் ஒரு முறை எடுத்தா போதும் 50 வயது வரை ரினிவலுக்கு அலைய தேவையில்லை! த்திய அரசு கொண்டு வரும் புது நடைமுறை!

ஓட்டுநர் உரிமத்தை 20 ஆண்டுகளுக்கு பதிலாக, ஓட்டுநர்களின் 50 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கும் படியான புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



உதாரணத்திற்கு ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமத்தை எடுத்திருந்தால், அதற்குப் பிறகு அவர் தனது 40-வது வயதில் புதுப்பிக்க வேண்டும். தற்போது இதில் மாற்றம் வரவிருப்பதால், அவருக்கு 50 வயதாகும் வரை அந்த ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த முடியும். 

இதனால் கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் பயன்பாட்டில் இருக்கும். 50 வயதைக் கடந்த ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்.இதன் மூலம் அடிக்கடி உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறைவதுடன், பொதுமக்களின் நேரமும் செலவும் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவிங் லைசென்ஸ் (ஓட்டுநர் உரிமம்) பெறுவதற்கு முதலில் லேர்னர்ஸ் லைசென்ஸ் (Learner's Licence) பெற வேண்டும். இதற்கு Parivahan இணையதளத்தில் விண்ணப்பித்து, ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழைப் பெறலாம். லேர்னர்ஸ் லைசென்ஸ் கிடைத்த 30 நாட்களுக்குப் பிறகு, ஓட்டுநர் தேர்வுக்கான (Driving Test) தேதியை முன்பதிவு செய்து, நேரில் சென்று தேர்ச்சி பெற்று பெர்மனன்ட் லைசென்ஸைப் (Permanent Driving Licence) பெறலாம்

பொதுமக்களின் அலைச்சலைத் தவிர்க்க, 20 ஆண்டுகள் என்ற பழைய நடைமுறையை மாற்றி, ஓட்டுநர் உரிமத்தை 50 வயது வரை செல்லுபடியாகும் வகையில் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்புகள் மற்றும் முழுமையான டிஜிட்டல் நடைமுறைகள் செயல்பாட்டிற்கு வரும்போது, RTO அலுவலகத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.I

ஓட்டுநர் உரிமம் தொடர்பான உங்கள் தற்போதைய லைசென்ஸ் விபரங்களைச் சரிபார்க்க அல்லது புதுப்பிக்க, அதிகாரப்பூர்வ Sarathi Parivahan இணையதளத்தைப் பயன்படுத்தலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback