Breaking News

ஜூன் 15 ஆம் தேதி முதல் லாரி வாடகை 25 சதவிகிதம் உயர்த்தப்படும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஜூன் 15 ஆம் தேதி முதல் லாரி வாடகை 25 சதவிகிதம் உயர்த்தப்படும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு



 டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகைக் கட்டணம் 25 சதவீதம் உயர்த்த மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தனராஜ் தலைமையில் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள் பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில், ‘மே 15 முதல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க லாரி வாடகை கட்டணம் தற்போதைய கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அதிக பாரம் ஏற்றும் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சரக்கு லாரியில் இடத்திற்கு தகுந்தபடி கிலோ மீட்டருக்கு ரூ.10 முதல் ரூ.25 வரை கட்டணம் தற்போது நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது. வாடகை உயர்வால் இது கிலோ மீட்டருக்கு ரூ.12 முதல் ரூ.30 வரை உயரும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback