அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் உத்தரவு Chief Minister Mr. S. Joseph Vijay orders to renovate and renovate Amma Canteens
அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு Chief Minister Mr. S. Joseph Vijay orders to renovate and renovate Amma Canteens
தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
உணவு என்று சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
