Breaking News

தவெக ஆதரவு இல்லை - ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்பிற்கு ஆதரவு - ஐயுஎம்எல் கட்சி அறிவிப்பு…!

அட்மின் மீடியா
0

ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்பிற்கு ஆதரவு - ஐயுஎம்எல் கட்சி அறிவிப்பு…!




தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், ஆகியோர் எஸ்.எஸ்.பி.சையத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாரூக் பாஷா

தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது.

சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய இரண்டு உறுப்பினர்களும் மேதகு ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback