தவெகவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை-ஆளுநரிடம் திட்டவட்டமாக தெரிவித்த அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் - வீடியோ வெளியிட்ட த வெக
தவெகவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை-ஆளுநரிடம் திட்டவட்டமாக தெரிவித்த அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் - வீடியோ வெளியிட்ட த வெக
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், அவரது பெயரில் போலி கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன்னுடைய கட்சியைச் சேர்ந்த மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்றும் தமிழகத்தில் விஜய் குதிரை பேரம் நடத்துகிறார் என்றும் தினகரன் கவர்னரிடம் புகார் அளித்திருந்தார்.r
இந்நிலையில் காணாமல் போன எம்எல்ஏ காமராஜ், கவர்னர் மாளிகை வருவதாக கிடைத்த தகவலை அடுத்து டிடிவி தினகரன் மீண்டும் கவர்னர் மாளிகைக்கு வந்து கவர்னரை சந்தித்தார்
கவர்னரை சந்தித்த பின் தினகரன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார்.
எங்களது எம்எல்ஏ பெயரில் கொடுக்கப்பட்ட கடிதம் மோசடியானது. தவெக கட்சி தூய கட்சி என்று பேசிக் கொண்டு மோசடியில் ஈடுபடுகிறது' இவ்வாறு தினகரன் தெரிவித்தார்
காணாமல் போனதாக தினகரனால் புகார் தெரிவிக்கப்பட்ட மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், அவருடன் இருந்தார்.தன் பெயரில் தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவாக வழங்கப்பட்ட கடிதம் மோசடியானது என்று காமராஜ் குற்றம் காட்டினார்.
காமராஜ் பெயரில் போலியான கடிதத்தை கவர்னரிடம் வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தினார். போலீசில் புகார் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
அமமுக எம்எல்ஏ காமராஜ் பேசியதாவது, வாகனத்தில் வந்துகொண்டு இருந்ததால் டிடிவி தினகரனின் தொலைபேசி அழைப்பை எடுக்க முடியவில்லை என விளக்கம் அளித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தவெக தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், அமமுக எம்எல்ஏ காமராஜ் எவ்வித கட்டாயமும் இன்றி, முழு சுயநினைவுடன் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தில் கையெழுத்திடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற காமராஜ், தான் கடிதம் ஏதும் வழங்கவில்லை என்றும், தனது பெயரில் யாரோ மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது தவெக வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஆதாரத்தால், காமராஜின் முந்தைய மறுப்பு மற்றும் தினகரனின் குற்றச்சாட்டுகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், தவெக-வின் இந்த வீடியோ வெளியீடு அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்எல்ஏக்கள் ஆதரவு குறித்த சர்ச்சைகள் முற்றியுள்ளதால், ஆளுநரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Tags: தமிழக செய்திகள்
