புதிய ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
புதிய ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறது. இதுவரை ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜனநாயகத்தின் முக்கியப் பணிஅந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து ஆளுநர் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
புதிய ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
