Breaking News

விஜய் தப்பு செய்ய மாட்டான். தப்பு செய்யவும் விடமாட்டான் முதல்வராக பதவியேற்றவுடன் விஜய் பேசியது என்ன

அட்மின் மீடியா
0

விஜய் தப்பு செய்ய மாட்டான். தப்பு செய்யவும் விடமாட்டான். யாருக்காவது அப்படி எண்ணம் இருந்தால், இப்பவே அதை அழித்துவிடுங்கள். ஒரே பவர் செண்டர் அதுநான் தான் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.



சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வராக பதவியேற்றபின் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், 

எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என இருந்த சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான். வறுமை என்றால் என்ன என்பது குறித்து எனக்கும் தெரியும்.

மன்னர் பரம்பரையில் இருந்து வந்துவிடவில்லை. உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் மகன் மாதிரி தான் நானும். அப்படித்தான் நானும் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் எனக்கு சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்கள். நீ வா தம்பி நாங்க பாத்துக்குறோம் என நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். இந்த பயணத்தில் எனக்கு ஏராளமான கஷ்டங்கள் இருந்தாலும், எனக்காக உடன் இருந்த உங்களுக்கும் அதே கஷ்டங்கள், அதே அவமானங்கள். அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடன் இருந்தீர்கள்.

என்னை முதல்வராக்கியிருக்கிறீர்கள். என்னுடைய உறவுகளே, சொந்தங்களே நான் தேவதூதன் கிடையாது. அது செய்வேன், இது செய்வேன் எனச் சொல்லி ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியம் என்பதை மட்டுமே செய்வேன். தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி மேல் கடன் உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். அப்படியான ஒரு நிலையில் தான் இந்த பொறுப்பை நான் கையில் எடுத்திருக்கிறேன்.

அரசிடம் என்ன இருக்கிறது எது இல்லை என்பது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறேன். அதை தான் முதலில் செய்ய இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு, மறைவு இல்லாமல் செய்வேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவேன். அதற்கு அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்பை ஸ்ட்ரிக்டாக வைத்திருப்பேன். போதைப்பொருள் தடுப்புக்கு உரிய முயற்சி எடுப்பேன். சட்டம் ஒழுங்கு மூலம் எல்லாருக்குமான பாதுகாப்பை உறுதி செய்வேன். நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தான்.

கல்வி, மருத்துவம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன். இந்த விஜய் தவறு செய்ய மாட்டான். அது யாராக இருந்தாலும் சரி, தவறு செய்ய விடமாட்டேன். என் தலைமையில் தான் முழு அதிகாரமும் இருக்கும்.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இந்த தவெக அரசில் நன்றாக இருப்போம். சிறுபான்மை சகோதரர்களுக்காக இந்த அரசு உடன் நிற்கும். அதில் சந்தேகம் வேண்டாம். அதில் விஜயை நம்பலாம். என்னுடைய குட்டி நண்பர்களால் தான் இது நடந்திருக்கிறது. அவர்களுக்கு நன்றி. அவர்களின் வருங்காலத்துக்கு ஏற்ற விஷயங்களை செய்து கொடுப்பேன்” என்றார்.

தமிழ்நாடு இளைஞர்கள் போதைக்கு சீரழிவதை இனி பார்க்க முடியாது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க இன்றிலிருந்தே நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டேன்: முதல்வர் விஜய் அறிவிப்பு

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback