அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்தார்.நேற்று 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில், இன்று ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா. இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பலம் 43 ஆக குறைந்துள்ளது.
அதிமுக நிர்வாகிகள் சசிரேகா, பாப்புலர் முத்தையா மற்றும் அதிவீரராம பாண்டியன் உள்ளிட்டவர்களும் இசக்கி சுப்பையாவுக்கு ஆதரவாக சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள் வெடித்துள்ள நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (MLA) மற்றும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேற்றைய தினம் 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், இன்று 4-வது நபராக இசக்கி சுப்பையாவும் வெளியேறுவது அதிமுக தலைமைக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், தென் மாவட்டங்களின் முக்கிய முகமுமான இசக்கி சுப்பையா, இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து, சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை நேரில் சந்தித்து தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 44-லிருந்து 43 ஆகக் குறைந்துள்ளது.
Tags: அரசியல் செய்திகள்
