கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலின் மூலம் கே.ஏ. செங்கோட்டையன் 10-வது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு அபூர்வ மைல்கல்லை எட்டியுள்ளார். 1977-ல் தொடங்கிய இவரது தேர்தல் பயணம், 2026-ல் ஒரு புதிய கட்சியின் வெற்றிக்கான தொடக்கமாக மாறியுள்ளது. 10 முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்வான மிகச் சில தலைவர்களின் பட்டியலில் தற்போது செங்கோட்டையனும் இணைந்துள்ளார். இத்தனை ஆண்டுகளாகத் தொகுதியில் அவர் செய்த மக்கள் பணிகளும், அவருக்கும் தொகுதி மக்களுக்குமான நெருக்கமான உறவுமே இந்தத் தொடர் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
