5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Heavy rains with thunderstorms expected in 5 districts - Meteorological Department warns
5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Heavy rains with thunderstorms expected in 5 districts - Meteorological Department warns
சுமார் 1.5 கிமீ உயரத்தில், கிழக்கு உத்ர பிரதேசம் முதல் லட்சத்தீவு வரை, மத்திய மகாராஷ்டிரா, மராத்த்வாடா, உள் கர்நாடகம் மற்றும் கேரளம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கி மீ.உயரத்தில், தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனைச் ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் இருந்து தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை, கேரளம், தெற்கு உள் கர்நாடகம் மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
20-05-2026: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
21-05-2026: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
Tags: தமிழக செய்திகள்