தவெகவுக்கு 41% வாக்குகள் 121 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முன்னாள் IPS அதிகாரி ரவி கருத்து கணிப்பு
தவெகவுக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் 29ஆம் தேதி வெளியாகின.
மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு :-
திமுக கூட்டணி 122-132 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 87-110 இடங்களைப் பிடிக்கும் எனத் கணிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தவெக 10-12 இடங்களை மட்டுமே பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பிற கட்சிகள் 0-6 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக்- பி மார்க் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு:-
திமுக கூட்டணி 125-145, இடங்கள்
அதிமுக கூட்டணி 65-85 இடங்கள்
தவெக 16-26 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு:-
திமுக 145-160 இடங்களிலும்,
அதிமுக 50-65 இடங்களிலும்,
தவெக 13-18 இடங்களிலும்,
பிற கட்சிகள் 5-8 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு
\திமுக 125-145 இடங்களிலும்,
அதிமுக 65-80 இடங்களிலும்,
தவெக 18-24 இடங்களிலும்,
பிற கட்சிகள் 2-6 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDTV கருத்துக்கணிப்பு.
திமுக கூட்டணிக்கு 125-145 தொகுதிகளும்,
அதிமுக கூட்டணிக்கு 65-80 தொகுதிகளும்,
தவெகவுக்கு 18-24 தொகுதிகளும்,
மற்றவை 2-6 தொகுதிகளும் கிடைக்கும்
JVC TIMES NOW நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு
அதிமுக கூட்டணி 128- 147 இடங்களிலும்,
திமுக கூட்டணி 75- 95 இடங்களிலும்,
தவெக 8-15 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
CNN- NEWS 18 கருத்துக்கணிப்பு
திமுக கூட்டணி 101-113 இடங்களிலும்,
அதிமுக கூட்டணி 114- 124 இடங்களைப் பிடிக்கும் எனத் கணிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தவெக 4-10 இடங்களை மட்டுமே பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, 234 தொகுதிகளிலும் முன்னாள் காவல்துறையினரை பயன்படுத்தி 2.34 லட்சம் பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 41% வாக்குகள் கிடைத்து, 121 இடங்கள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
திமுக, அதிமுகவுக்கு காலம் காலமாக வாக்களித்த மக்கள் பலரும் தவெகவுக்கு வாக்களித்ததாக இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரவி கூறியுள்ளார். அவர்களிடம் காரணம் கேட்டபோது, தங்கள் பேரன், பேத்திகள் தங்களை தவெகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால் வாக்களித்ததாக கூறியுள்ளனர் என்றும் ரவி கூறியுள்ளார்.
தொகுதிக்கு 10 முன்னாள் காவல்துறையினரை வைத்து 2.34 லட்சம் பேரிடம், அனைத்து வயதினரிடமும் கருத்துக் கேட்கப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
அவரது சமூக வலைதள கணக்கில், இது அனைத்தும் சர்வே செய்து வந்த தனிப்பட்ட கருத்து கணிப்பு, கமெண்ட் செக்ஷனில் யாரும் குஜிலிமஸ்து போட்டுக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=pCcysPR0LI8
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்


