Breaking News

மும்பையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு தர்பூசணி சாப்பிட்டதால் 4 பேர் மரணம் ? வழக்கில் புதிய திருப்பம் விஷத்தால் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் watermelon death case

அட்மின் மீடியா
0

மும்பையையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு தர்பூசணி சாப்பிட்டதால் 4 பேர் மரணம் ?  வழக்கில் புதிய திருப்பம் விஷத்தால் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் 



மும்பை பெண்டி பஜார் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40) மற்றும் அவரது மனைவி, இரண்டு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கடந்த சனிக்கிழமை இரவு  தனது உறவினர்கள் வீட்டில் பிரியாணி விருந்து சாப்பிட்டு விட்டும் மீண்டும் தங்களது வீட்டிற்கு சென்ற பிறகு அப்துல்லாவும், அவரது குடும்பத்தினரும் தர்பூசணி சாப்பிட்டனர். 

அவர்கள் தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அடுத்தடுத்து ஒவ்வொருவராக நான்கு பேரும் இறந்து போனார்கள்.தர்பூசணி சாப்பிட்டதால்தான் நான்கு பேரும் இறந்தனர் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது.

தர்பூசணி சாப்பிட்டதால்தான் அவர்கள் இறந்தார்கள் என மக்கள் அச்சமடைந்து பழங்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.

தர்பூசணியால் மட்டும் இப்படி ஒரு மரணம் நிகழ வாய்ப்பில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்" என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருபுறம் மர்ம மரணங்கள் குறித்த விசாரணை ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் வியாபாரிகளும் விவசாயிகளும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை மற்றும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தடயவியல் சோதனை ஆகியவற்றில் இறந்தவர்களின் மூளை, இருதயம், சிறுகுடல் போன்றவை பச்சையாக மாறி இருந்தது தெரிய வந்தது. 

மேலும்  வழக்கமான உணவு விஷமாகி போய் அவர்கள் இறந்ததற்கான எந்தவித அறிகுறியும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக ndtv செய்தி வெளியிட்டுள்ளது

மேலும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் தர்பூசணி சாப்பிட்டதற்கும் இந்த மரணத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. குடும்பத்தினர் மன அழுத்தத்தில் இருந்தார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

https://www.ndtv.com/india-news/watermelon-may-not-have-killed-4-in-mumbai-say-sources-organs-were-green-11436792

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback