Breaking News

அதிமுகவில் எழுந்த குழப்பம்? இரண்டாக பிரிகிறதா அதிமுக? சி.வி.சண்முகம் தலைமையில் 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

அட்மின் மீடியா
0

அதிமுகவில் எழுந்த குழப்பம்? இரண்டாக பிரிகிறதா அதிமுக? சி.வி.சண்முகம் தலைமையில் 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை




தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் ஈடுபட்டு வரும் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் தற்போது சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் தனியே ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்பி வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், லீமா ரோஸ், மரகதம் குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

காலையில் இபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில், தற்போது 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சி.வி. சண்முகம் தலைமையிலான குழு, தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback