Breaking News

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி நாடு முழுவதும் 20 ம் தேதி மெடிக்கல் கடைகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு Nationwide Chemist Shutdown On May 20

அட்மின் மீடியா
0

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கம் (AIOCD) அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, மே 20 அன்று இந்தியா முழுவதும் பெரும்பாலான மருந்துக் கடைகள் மூடப்பட வாய்ப்புள்ளது

More than 1.2 million chemists across India, spearheaded by the All India Organisation of Chemists and Druggists (AIOCD), are staging a nationwide one-day shutdown on May 20, 2026



வேலைநிறுத்தக் காரணம்: ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்களின் தள்ளுபடி முறை மற்றும் முறையான அனுமதியின்றி மருந்துகள் விற்கப்படுவதைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் இதில் பங்கேற்பதால் மருந்து விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

தேவையான அத்தியாவசிய மற்றும் தொடர்ந்து நீங்கள் உட்கொள்ளும் மாத்திரைகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. சுமார் 12.4 லட்​சம் மருந்​தகங்​கள் இந்த வேலைநிறுத்​தத்​தில் ஈடுபட உள்ளதால் மருந்து விநி​யோகம் பாதிக்​கப்​படும் என கூறப்படுகிறது.

இது தொடர்​பாக அகில இந்​திய மருந்தக உரிமை​யாளர்​கள் மற்றும் விற்​பனை​யாளர்​கள் சங்​கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 

  • முறைப்​படுத்​தப்​ப​டாத ஆன்​லைன் மருந்து விற்பனை​யால் நோயாளி​களின் பாது​காப்​புக்குப் பெரும் அச்​சுறுத்​தல் ஏற்பட்டுள்ளது. 
  • முறை​யான சரி​பார்ப்பு இன்றி மருந்​துகள் விநியோகிக்​கப்​படு​வ​தால், ஒரே மருந்​துச் சீட்​டைப் பலமுறை பயன்படுத்தும் அவல நிலை காணப்​படு​கிறது.
  • ஆன்​டிப​யாடிக், போதை தரக்​கூடிய மருந்​துகள் தடை​யின்றி கிடைப்​ப​தற்கு வழி​வகுக்​கிறது. 
  • செயற்கை நுண்​ணறிவு மூலம் உரு​வாக்​கப்​பட்ட போலி மருந்​துச் சீட்​டு​களைப் பயன்​படுத்தி மருந்​துகள் விற்​பனை செய்​யப்​படு​வ​தால், மருந்து எதிர்ப்புத்திறன் (ஏஎம்​ஆர்) அதி​கரிக்​கும் அபா​யம் உள்​ளது. 
  • கொரோனா காலத்​தில் நடை​முறைப்​படுத்​தப்​பட்ட தற்காலிகத் தளர்​வு​களைப் பயன்​படுத்​தி, ஆன்லைன் நிறுவனங்கள் மருந்து விதி​களை மீறி வரு​கின்​றன.
  • மின் மருந்​தகச் செயல்​பாடு​கள் தொடர்​பான அரசாணை​களை மத்திய அரசு உடனடி​யாகத் திரும்​பப் பெற வேண்​டும். 

இந்தத் தொழிலை நம்​பி​யுள்ள சுமார் 5 கோடி மக்​களின் வாழ்வாதா​ர​மும் இதனால் பாதிக்​கப்​படும். 

மே 20-ம் தேதிக்​குள் உரிய நடவடிக்கை எடுக்​கப்​ப​டா​விட்​டால், போராட்​டம் தீவிரப்படுத்​தப்​படும். 

மே 20 அன்று வேலைநிறுத்​தம் நடைபெற்றாலும், அவசர கால மருந்​துகள் தடை​யின்றி கிடைக்கப் ஏற்​பாடு செய்யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback