Breaking News

மாண்புமிகு முதல்வர் விஜய்க்கு 13-ம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு

அட்மின் மீடியா
0

மாண்புமிகு முதல்வர் விஜய்க்கு 13-ம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு



தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது

ஆனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தேவைப்பட்டதால், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. 

த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய இரு கட்சிகள் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன.

இதன் மூலம் த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்ததை தொடர்ந்து, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களுடன் கவர்னரை சந்தித்த விஜய், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். 

ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்கிறார். 

சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (11-ம் தேதி) பதவியேற்கின்றனர். தற்காலிக சபாநாயகர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 

13-ம் தேதிக்குள் சட்டப் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என விஜய்க்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

ஆதரவு கிடைப்பதில் இருந்த சிக்கல்கள் நீங்கி, விஜய் பதவியேற்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால், தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback