தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஐ.யூ.எம்.எல் கட்சி ஆதரவளித்தது.பெரும்பான்மை 120 ஆக உயர்ந்தது..!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஐ.யூ.எம்.எல் கட்சி ஆதரவளித்தது.பெரும்பான்மை 120 ஆக உயர்ந்தது..!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 34.92% வாக்குகள் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் 108 இடங்கள் மட்டுமே உள்ளன.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவனிடம் இருந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரடியாக பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.நேற்று இரவு ஆதரவு என தகவல்கள் வெளியான நிலையில் ஆதரவு அளிக்கவில்லை என ஐ.யூ.எம் எல் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஆதரவு அளித்துள்ளது.
இதன் மூலம் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு 120 ஆக உயர்ந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
