இனி எல்லாமே ஆனலைன் தான் டெண்டர், கட்டண நடைமுறைகள் 100% ஆன்லைன் மயம் - தமிழக அரசு உத்தரவு!
இனி எல்லாமே ஆனலைன் தான் டெண்டர், கட்டண நடைமுறைகள் 100% ஆன்லைன் மயம் - தமிழக அரசு உத்தரவு!
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு.
கட்டிட அனுமதிக்கான விண்ணப்பக் கட்டணம், முன்வைப்புத் தொகை, பாதுகாப்பு தொகை உள்ளிட்ட அனைத்தும் இணையதளம் மூலமே சமர்பிக்கப்பட வேண்டும் என உத்தரவு.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகராட்சி நிர்வாகங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர அரசு தொடர்ந்து முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் நடைபெறும் டெண்டர் கோருதல் மற்றும் பல்வேறு கட்டணங்களைச் செலுத்தும் முறைகள் இனி முழுமையாக இணையதளம் வழியாக மட்டுமே நடைபெறும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையின்படி,
துறையின் கீழ் வரும் அனைத்து விதமான கட்டுமானப் பணிகள், குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கான டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இனிமேல் ஆன்லைன் மூலமாகவே மட்டுமே கையாளப்பட வேண்டும்.
புதிய உத்தரவின்படி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று வரைவோலை அல்லது ரொக்கமாகக் கட்டணங்களைச் செலுத்தும் பழைய நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
இனி வரும் காலங்களில் புதிய கட்டிட அனுமதிக்கான விண்ணப்பக் கட்டணம், டெண்டர்களில் பங்கேற்பதற்கான முன்வைப்புத் தொகை, ஒப்பந்தப் பாதுகாப்புத் தொகை மற்றும் இதர உள்ளூர் வரிகள் என அனைத்துக் கட்டணங்களும் பிரத்யேக அரசு இணையதளம் மூலமாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்:
இதற்கு முன்பாக, டெண்டர் கோருவதிலும், பல்வேறு கட்டணங்களைச் செலுத்துவதிலும் சில உள்ளூர் நிர்வாக மட்டங்களில் முறைகேடுகள் மற்றும் கால தாமதங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. கொண்டு வரப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் முறையினால், தகுதியான ஒப்பந்ததாரர்கள் எவ்விதத் தலையீடும் இன்றித் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்.
அரசுத் துறையின் இந்த டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கை, நிர்வாக நடைமுறைகளில் தேவையற்ற கால தாமதத்தை அடியோடு ஒழிப்பதுடன், முறைகேடுகளை முற்றிலும் தடுத்து, 100 சதவீத வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
Tags: தமிழக செய்திகள்
