10-ஆம் தேதி வரை சென்னையிலேயே தங்க வேண்டும் MLA களுக்கு உத்தரவிட்ட ஸ்டாலின்
10-ஆம் தேதி வரை சென்னையிலேயே தங்க வேண்டும் MLA2 களுக்கு உத்தரவிட்ட ஸ்டாலின்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, ஆட்சி அமைப்பது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முழு அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரப்படி, கட்சியின் நலன் கருதி நாம் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கான சூழல்கள் கனிந்து வருகின்றன. நமது கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வரும் மே 10-ஆம் தேதி வரை கட்டாயம் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும்.
எந்த நேரத்திலும் அவசர அழைப்பு வரலாம், என அவர் உத்தரவிட்டுள்ளார்.மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தத்தமது பகுதி எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றொரு தேர்தலுக்குத் தயாராக இல்லாத நிலையில், மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே திமுகவின் முதன்மை நோக்கம்.
திராவிடக் கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் மதவாத சக்திகள் காலூன்றுவதைத் தடுக்க வேண்டிய கட்டாயம் திமுக-விற்கு உள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலில், உடனடி முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவதாக ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒருபுறம் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி வருகிறார். மறுபுறம் அதிமுக மற்றும் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் திமுக-விற்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
தவெக-விற்கு ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில், அடுத்தகட்ட நகர்வு குறித்து திமுக ஆலோசித்து வருகிறது.
Tags: தமிழக செய்திகள்
