Breaking News

வாட்ஸ் அப்புக்கு போட்டியாக X CHAT ஆப் அறிமுகப்படுத்திய எலான் மஸ்க் மொபைல் நம்பரே தேவையில்லை சிறப்பம்சங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

வாட்ஸ் அப்புக்கு போட்டியாக X CHAT ஆப் அறிமுகப்படுத்திய எலான் மஸ்க் மொபைல் நம்பரே தேவையில்லை சிறப்பம்சங்கள் முழு விவரம்



வாட்ஸ் அப்புக்கு போட்டியாக x செயலியில் "X CHAT" என்ற மெசெஜ் சேவையை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க் இந்த 'XChat' சேவை தற்போது ஐபோன் (iOS) மற்றும் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் இணையப் பதிப்புகளில் வெளிவரத் தொடங்கியுள்ளது. விரைவில், ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் இது அறிமுகமாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டுவிட்டரை எலான் மஸ்க் கடந்த 2022-ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அந்த செயலியில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். 

இந்நிலையில், வாட்ஸ்-அப்பிற்கு போட்டியாக சாட்டிங் வசதியும் எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ளது. ஆடியோ, வீடியோ கால் வசதிகளுடன் இந்த சாட்டிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் ஃபோன் நம்பர் கொடுக்காமல், X தளத்தின் மூலமாகவே ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் இதில் எந்த வகையான கோப்புகளையும் (Photos, Videos, Documents) இதன் மூலம் நீங்கள் எளிதாக அனுப்பலாம்.போன் நம்பர் இல்லாமல், X கணக்கு மூலமே லாகின் செய்யலாம்.

பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த புதிய சாட்டிங் வசதி அறிமுகமாகியுள்ளது. 

தற்போது ஆப்பிள் ஐஓஎஸ் (iOS) சாதனங்களில் மட்டும் இந்த வசதி கிடைக்கிறது. விரைவில் ஆண்ட்ராய்டு போன்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback