ஈரானுக்கு எதிராக நடவடிக்கைக்கு எங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை - அமெரிக்காவை எச்சரித்த அமீரகம் UAE Bars Use of Its Territory for Military Strikes Against Iran
ஈரானுக்கு எதிராக நடவடிக்கைக்கு எங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை - அமெரிக்காவை எச்சரித்த அமீரகம் UAE Bars Use of Its Territory for Military Strikes Against Iran
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகும் நிலையில் போர் வந்தால், ஈரானை பாதுகாக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவதுன்ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் அதன் வான்வெளி, நிலம் அல்லது கடல்வழித்தடங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம ஜனவரி 26, திங்கள் அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், அமீரகம் எந்தவொரு தாக்குதலுக்கும் ஆதரவை வழங்காது என்று தெரிவித்துள்ளது.
மேலும், சர்ச்சைகள் இராணுவ ரீதியாக அதிகரிப்பதற்குப் பதிலாக உரையாடல், மற்றும் சர்வதேச சட்டம் மற்றும் தேசிய இறையாண்மையை மதிப்பது போன்றவற்றின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நம்புவதாகவும் அமீரகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அண்டை நாடான சவுதி அரேபியாவும் கடந்த வாரம் இதேபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது, ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலிலும் அதன் பிரதேசம் அல்லது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று அறிவித்தது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது ஈரான் தொடர்ந்து ஒடுக்குமுறையை மேற்கொண்டால், ஒரு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில் இந்த அறிவிப்புகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
