இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ News Headlines Today
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ News Headlines Today : இன்று சனிக்கிழமை, ஜனவரி 24, 2026 முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ:
🏛️அரசியல் செய்திகள்:-
பிரதமர் மோடியின் வருகை: மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். திமுக ஆட்சியின் "கவுண்டவுன்" தொடங்கிவிட்டதாக அவர் விமர்சித்தார். இந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஸ்டாலின் பதிலடி: பிரதமரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின், "டபுள் இன்ஜின் என்பது தமிழ்நாட்டில் ஓடாத 'டப்பா இன்ஜின்'" என்று விமர்சித்துள்ளார்.
பாமக - பாஜக கூட்டணி: கூட்டணியில் 'மாம்பழம்' சின்னம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
🌦️ வானிலை செய்திகள்
சென்னையில் இன்று அதிகாலையிலேயே பரவலாக மழை பெய்தது. சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
📢 தமிழக செய்திகள்:-
மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தின் (MGNREGA) பெயரை 'விக்சித் பாரத்' என மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளார். திட்டத்தின் பெயரை மாற்றாமல் 'மகாத்மா காந்தி' பெயரிலேயே தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளன.
மெட்ரோ பூங்கா திறப்பு: சென்னையில் ₹3.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய 'மெட்ரோ பூங்கா'வை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பிராட்வே பேருந்து நிலையம்: மறுசீரமைப்பு பணிகளுக்காக சென்னை பிராட்வே பேருந்து நிலையம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பிராட்வேக்கு பதிலாக ராயபுரம், தீவுத்திடல் முனையத்தில் இருந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
திருப்பரங்குன்றம் மலை மேல் 24 மணி நேரமும் தீபம் ஏற்றக் கோரிய வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை (ED) சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று முதல் மீண்டும் மாடி பேருந்துகள் (Double Decker Bus) மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனை வழக்கில் போக்குவரத்துக் காவலர் உள்பட மூவர் கைதுகடந்த 21ம் தேதி பிடிபட்ட குரூஸ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு போக்குவரத்துக் காவலரான நசீர் அகமது சப்ளை செய்தது தெரியவர, அவரை கைது செய்ததுடன் கேரளாவில் நசீருக்கு சப்ளை செய்த நபரும் கைது
கோவை, காட்டூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் மற்றும் பேரல்களில் வைக்கப்பட்டிருந்த ஆயில் உள்ளிட்டவை எரிந்து வருவதால் கடும் சவாலுடன் தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் பணி தீவிரம்.சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது
✍🏻இந்திய செய்திகள்:-
கேரளா: பேருந்து வீடியோவால் தீபக் உயிரை மாய்த்த வழக்கில் கைதான ஷிம்ஜிதா, 7 வீடியோக்களை பேருந்தில் எடுத்துள்ளதாக போலீசின் ரிமாண்ட் அறிக்கையில் தகவல். பேருந்தில் இருந்தோரிடம் நடத்திய விசாரணையில் பாலியல் |தொந்தரவுக்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு
தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான வாராந்திர அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை வரும் 28ம் தேதி தொடங்குகிறது. வாரந்தோறும் புதன்கிழமை அன்று தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். அதேநாளில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45-க்கு தாம்பரம் வந்தடையும்
இந்தியாவில் பயணிகள் விமான தயாரிப்பு பணிகளை தொடங்க உள்ளது அதானி குழுமம். உலகின் மூன்றாவது பெரிய விமான கட்டுமான நிறுவனமான பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனத்துடன் இணைந்து தொழில் தொடங்க நடவடிக்கை
🎬 சினிமா செய்திகள்
விஜய்யின் 'ஜனநாயகன்': படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் ஜனவரி 27-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கவுள்ளது.
🏏 விளையாட்டு செய்திகள்:-
இந்தியா வெற்றி: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர்.
🌍உலக செய்திகள்:-
உலக சுகாதார அமைப்பில் தன்னிச்சையாக இணைந்த முதல் மாகாணமாக உருவெடுத்தது கலிபோர்னியா!WHO-வின் சர்வதேச நோய் தடுப்பு வலையமைப்பில் இணைந்துள்ள கலிபோர்னியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படும் என அறிவிப்பு.
அமேசான் நிறுவன வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் 30,000 கார்ப்பரேட் பணியிடங்களை ரத்து செய்ய அந்நிறுவனம் திட்டம். இதைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி முதல் சுமார் 16,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.அமேசான் வெப் சர்வீசச்ஸ், ரீடைல், ப்ரைம் வீடியோ, மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகிய முக்கிய பிரிவுகளில் பணியாற்றும் பொறியாளர்கள் உள்பட பல உயர் அதிகாரிகள் இதனால் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.
அமெரிக்கா விதித்துள்ள 50% வரிகளால், இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை.வரி உயர்வால் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், ஆலைகள் |மூடப்படும் அபாயமும், வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதை சம்மந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காணத் துணை குடியரசுத் தலைவருக்கு AEPC கடிதம்.
ஈரான் அரசுக்கு எதிராக போராடிய 5000க்கும் மேற்பட்டோர் படுகொலை. ஈரானை கண்காணிக்க ராட்சத போர்க்கப்பலை அனுப்பியது அமெரிக்கா.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு
