Breaking News

இன்றைய முக்கியச் செய்திகள் News Headlines Today

அட்மின் மீடியா
0
இன்று வெள்ளிக்கிழமை, ஜனவரி 23, 2026. இன்றைய முக்கியச் செய்திகளின் தலைப்புகள் இதோ: 





தமிழக செய்திகள்:-

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதல் தேர்தலிலேயே விஜயின் தவெகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு; தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றது தவெக

குறைந்தபட்சம் 5 விழுக்காடு சட்டமன்ற தொகுதிகளில் தவெக போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை; தவெக போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னம் வேறு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் விசில் ஊதப்பட்டுவிட்டதால், அனைத்து கட்சிகளும் தேர்தலை நோக்கி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - த.வெ.க.விற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி கருத்து

2021 தேர்தலில் அதிமுக சார்பில் தேர்வான வைத்திலிங்கம், MLA பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஒரத்தநாடு தொகுதி காலியானதாக சபாநாயகர் அறிவிப்பு.கடந்த 21ம் தேதி ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய அவர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பிராட்வே பேருந்து முனையத்தில் இருந்து நாளை (24.01.26) முதல் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு பிராட்வேக்கு பதிலாக பேருந்துகள் ராயபுரம், தீவுத்திடல் *+ முனையத்தில் இருந்து நாளை முதல் இயக்கப்படும் பிராட்வே பேருந்து முனையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் நாளை முதல் தற்காலிக இடமாற்றம்

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் ஜனவரி 27-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மதுராந்தகத்தில் இன்று மாலை பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வரும் வேளையில், திருவனந்தபுரம் - தாம்பரம் இடையேயான புதிய 'அம்ரித் பாரத்' ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை (படுவம்பள்ளி, கணியூர்), கரூர், கிருஷ்ணகிரி மற்றும் மேட்டூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொல்காப்பியா பூங்காவிற்குள் செல்ல புதிய பாஸ் முறையும், மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

பிரதமர் மோடி தமிழக வருகை: சென்னையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்று முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கும் என்றும், ஜனவரி 25 அன்று நான்கு உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து - கோவை தனியார் கல்லூரியில் மாணவியின் கழுத்து, கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக தாக்கிய சக மாணவன். படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி; சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை

பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து நாய் கடித்ததை சொல்லாத பள்ளி மாணவர் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழப்பு.சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன் என்ற 15 வயது சிறுவனை ஒரு மாதத்திற்கு முன்பு நாய் கடித்துள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் விதமாக 24.01.2026 சனிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வேலை நாள் ஆகும்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என தனித் தீர்மானம். சட்டப்பேரவையில் இன்று முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நூற்றாண்டைக் கடந்த பாம்பன் பழைய ரயில்வே பாலத்தை அகற்றாமல் நினைவுச் சின்னமாக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்த நிலையில், பாலத்தை அகற்றும் பணி தொடக்கம். இப்பணிக்காக ரூ.2.81 கோடியில் டெண்டர் வழங்கப்பட்டு, 4 மாதத்தில் பணியை முடித்து பாலத்தை இடித்து அகற்ற இலக்கு

கனமழை எச்சரிக்கை: வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மதுராந்தகம் பொதுக்கூட்ட பேனரில் அன்புமணி படத்துடன் மாம்பழம் சின்னம் இடம் பெற்றுள்ளதால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி. ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா படங்கள் பேனரில் இடம்பெறவில்லை.

மோடி வருகைக்கும், 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கும் எதிர்ப்பு. மதுராந்தகத்தில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.

மதுரையில் கிருதுமால் நதி மாசடைவது தொடர்பாக, மதுரை மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (TNPCB) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தேசிய செய்திகள் (இந்தியா) 

எஸ்.ஐ.ஆர். பணிகளில் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.

அடுத்த தலைமுறை Wifi சேவைக்காக 6 GHz| Wifi அலைக்கற்றை பயன்படுத்த தொலை தொடர்பு அமைச்சகம் ஒப்புதல்; இதன் மூலம் Wifi வேகம் கணிசமாக அதிகரிக்கப்படும்.மேலும் அடுத்தகட்ட தொழில்நுட்பமான Wifi 6E மற்றும் Wifi 7 பயன்படுத்தும் Router-கள் தயாரிப்பிற்கும் வழிவகுக்கும் எனத் தெரிவிப்பு.

ஜம்மு காஷ்மீரில் சோகம்: தோடா மாவட்டத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஆளுநர் மனோஜ் சின்கா மற்றும் முதல்வர் ஓமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று 2-வது டி20 கிரிக்கெட் போட்டி. வெற்றி பெறும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிரம்.

கடந்த ஓராண்டில் இந்திய ஜவுளித்துறை 60,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விளையாட மாட்டோம்: வங்கதேச கிரிக்கெட் வாரியம்- நாங்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விரும்புகிறோம்; ஆனால், இந்தியாவில் விளையாட மாட்டோம்; ஐசிசியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்

குஜராத் - சூரத்தில் உள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் ரூ.21 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த அவலம்!சோதனை முறையில் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்ட போது தொட்டி சரிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த கட்டுமானத்தின் ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து அம்மாநில போலீசார் விசாரணை.

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு. டோடா எனும் பகுதியில் 17 பேரை ஏற்றிச்சென்ற ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒடிசா மாநில அரசு புகையிலை மற்றும் நிகோடின் கலந்த குட்கா விற்பனைக்கு முழுமையான தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது பெங்களூரு மணிக்கு 13.9 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லக்கூடிய அளவிற்கு வாகன நெரிசல் மிகுந்துள்ளதாக தகவல்

தேர்தல் ஆணையத்தின் அனைத்து சேவைகள் மற்றும் தகவல்களை வழங்கும் ஒருங்கிணைந்த "இசிஐநெட்" டிஜிட்டல் தளம் - டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற போர் விமானங்கள் டெல்லி குடியரசு தினவிழா வான் சாகசத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு - கடமை பாதைக்கு மேல் வானத்தில் நெற்றி திலக வடிவில் விமானங்கள் பறக்க உள்ளதாகவும் தகவல்


உலகச் செய்திகள் :-

டிரம்பின் "அமைதி வாரியம்" (Board of Peace): சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில், காசா மற்றும் உலக நாடுகளின் மோதல்களைத் தீர்க்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'அமைதி வாரியத்தை' முறைப்படி அறிவித்தார். இதில் பாகிஸ்தான் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. 

கராச்சி வணிக வளாகத் தீ விபத்து: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குல் பிளாசாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
 
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை. உக்ரைன், ரஷ்யா, அமெரிக்காவின் பிரதிநிதிகள் இன்றும், நாளையும் முத்தரப்பு பேச்சுவார்த்தை.

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் தெற்குப் பகுதி.பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம்.

துருக்கியில் குர்து மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணி. பெப்பர் ஸ்பிரே அடித்து போராட்டக்காரர்களை விரட்டிய காவல்துறை.




Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback