Breaking News

News Headlines Today இன்றைய முக்கிய செய்திகள்

அட்மின் மீடியா
0

News Headlines Today இன்றைய முக்கிய செய்திகள்



திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகளை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் - வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்! அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு -திருவள்ளுவர்

சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். 

வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள். 

இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். 

தொழில் வளர்ச்சிக்கும். மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள். 

இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி! (மு.க.ஸ்டாலின்) முதலமைச்சர் தமிழ்நாடு வெல்வோம் ஒன்றாக!

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை இன்னும் சற்று நேரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்!காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் ( வீரர்களுக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர இன்று சிறப்பு விமானம் இயக்கம். முதல் கட்டமாக மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

இந்திய கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த 9 மீனவர்கள் கைது! அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

உண்மையான வயது, குற்றப் பின்னணியை மறைத்து திருமணம் செய்வது, வாழ்க்கைத் துணையை மன ரீதியாக கொடுமைப்படுத்துவதற்கு │சமம். பொய் தகவல்களின் அடிப்படையில் அமைந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க முடியும்”| உண்மைகளை மறைத்து திருமணம் செய்த பெண்ணிடம் இருந்து விவாகரத்து கோரிய கணவரின் மனுவை ஏற்று | விவாகரத்து வழங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு.

NATO அமைப்பில் உறுப்பினராக உள்ள ஒரு நாட்டின் பகுதியை மற்றொரு உறுப்பு நாடான அமெரிக்கா கைப்பற்ற முயன்றால் அதுவே உலகின் முடிவாக இருக்கும். அது ஒரு பேரழிவை ஏற்படுத்தும்.. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு ஆதரவாக தன்னால் முடிந்த அனைத்தையும் போலந்து செய்யும். இருப்பினும் கிரீன்லாந்துக்கு படைகளை அனுப்பும் திட்டமில்லை” -டொனால்ட் டஸ்க், போலாந்து பிரதமர்

அமெரிக்காவைச் சேர்ந்த GRU Space என்ற நிறுவனம், நிலவில் உலகின் முதல் ஹோட்டலை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.இதன் கட்டுமானத்தை 2029ல் தொடங்கி, 2032ம் ஆண்டுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு. இந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு ரூ.90 கோடிக்கு மேல் செலவாகும் என கூறப்படுகிறது. இதற்கான முன்பதிவுகளை அந்நிறுவனம் இப்போதே தொடங்கியது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளைப் பிடித்து முதலிடம் பெற்றார் வலையங்குளம் பாலமுருகன்; முதல்வர் சார்பில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசு

இன்னும் 30 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு; தேனியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ஜனநாயகன் தணிக்கைச் சான்று விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு; மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்திய நீதிபதிகள்

வரும் 18ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு: புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்; அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

மஹாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு; மும்பை மாநகராட்சியை கைப்பற்றப் போவது யார் 

மஹாராஷ்டிர மாநகராட்சி தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு; தலைமைத் தேர்தல் அதிகாரியை இடைநீக்கம் செய்யவும் வலியுறுத்தல்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback