Breaking News

டபுள் டக்கர் பேருந்தில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி !

அட்மின் மீடியா
0

டபுள் டக்கர் பேருந்தில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி !


18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டக்கர் பேருந்து சென்னையின் சாலைகளில் மீண்டும் அடையாளமாக இயங்கத் தொடங்கியுள்ளது.

சென்னையின் அடையாளமாக விளங்கிய டபுள் டக்கர் பேருந்து 1970 ஆம் ஆண்டில் இருந்து தாம்பரம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்டு வந்தது. 

சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்றதால் 2008 ஆம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அசோக் லைலாண்ட் ஒரு கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பிலான மின்சார குளிர்சாதன வசதி உள்ள டபுள் டக்கர் பேருந்தை முதலமைச்சரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு பண்பாடு கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதன் முதற்கட்டமாக அரசு காப்பகங்களில் உள்ள மாணவர்களை சென்னையின் பிரதான இடமான எல்ஐசி, ஸ்பென்சர், சென்னை சென்டல் ரயில் நிலையம், பாரிமுனை தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, ஐஸ் கவுஸ் என்று பேருந்தில் சுற்றுலா அழைத்துச் சென்றது 

பொங்கல் பண்டிகை வரை தீவுத்திடலில் இந்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு இலவசமாகவும் பொதுமக்களை கட்டணம் செலுத்தியும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. 

மேலும் பொங்கலை முடிந்த பின்பு இணையதளம் மூலமாக பொதுமக்கள் அனைவரும் புக்கிங் செய்து சென்னையின் பிரதான சுற்றுலா தளங்களுக்கு டபுள் டக்கர் பேருந்து மூலமாக பயணம் செய்யலாம். மேலும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வரை அடுத்த கட்டமாக இந்த டபுள் டக்கர் பேருந்து இயக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



ஜனவரி 24ம் தேதி முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை இயக்கப்படுகிறது.இந்த பேருந்து தினசரி பயணிகளுக்கு மட்டுமில்லாமல், சுற்றுலா செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 

பேருந்து வழித்தடம்:-

எல்ஐசி கட்டிடம், ஸ்பென்சர் பிளாசா, மக்கான் மஸ்ஜித், சென்னை உயர் நீதிமன்றம், செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை துறைமுகம், நேப்பியர் பாலம், அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் வழியாக மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், பட்டினம்பாக்கம், சாந்தோம், காவல் ஆணையர் அலுவலகம், ராணி மேரி கல்லூரி, விவேகானந்தா ஹவுஸ், பிரசிடென்சி கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகம், எழிலகம், தூர்தர்ஷன், ராஜாஜி ஹால், ஓமந்தூரர் அரசு மருத்துவமனை வழியாக செல்லும் என 

டபுள் டெக்கர் பேருந்து வார நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும், 

வார இறுதி நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் இயக்கப்பட உள்ளது. 

இந்த பேருந்தில் பயணிக்க ttdconline.com என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவின்போது ஏறும் இடம், இறங்கும் இடத்தை உள்ளிட்டு, அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செய்ய வேண்டும். இதன்பிறகு, உங்களது ஏறும் இடத்தில் இருந்து டபுள் டெக்கர் பேருந்தில் பயணிக்கலாம். 

சுற்றுலாவுக்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்க ரூ.150 வசூலிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback