Breaking News

புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை - தமிழக அரசு

அட்மின் மீடியா
0


நீதிமன்ற உத்தரவுப்படி, அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதை உறுதி செய்யும் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இதன்மூலம் ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அத்தகைய முன்னுரிமையை பெற விண்ணப்பிக்க முடியும்.


தமிழ்நாட்டில் அரசு பணிகளில் தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீட்டிற்கு புதியதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இனி அரசு வேலைக்கு புதிதாக விண்ணப்பிக்கு நபர்கள் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback