Breaking News

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் - மும்பை மாநகராட்சியை கைப்பற்றும் பாஜக - சிவசேனா, காங்கிரஸ் படு தோல்வி

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளின் பதவி காலம் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை ஜனவரிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டது.


இதனை தொடர்ந்து மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. 



தேர்தல் கூட்டணி:-

மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 

இது தவிர பா.ஜ.கவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்திருந்தன. 

அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மும்பையில் தனித்து போட்டியிட்டது. 

காங்கிரஸ் கட்சி பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மும்பையில் மட்டும் 23 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

முன்னிலை:-

இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 

மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி 130 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. 

அதனைத் தொடர்ந்து சிவசேனா (உத்தவ்)-மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கூட்டணி 71 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது

காங்கிரஸ் 13 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது

இதன் மூலம் பா.ஜ.கவும், சிவசேனாவும்(ஷிண்டே) சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றி இருக்கிறது. 

மும்பை மாநகராட்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனாவின் கையை விட்டு சென்று இருக்கிறது. அதேசமயம் மும்பை மாநகராட்சியை பிடிக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் கனவும் நிறைவேறி இருக்கிறது. 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback