Breaking News

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… வெளிநாடு செல்ல விதிமுறைகள் தளர்வு முழு விவரம்

அட்மின் மீடியா
0

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… வெளிநாடு செல்ல விதிமுறைகள் தளர்வு முழு விவரம்


அரசு ஊழியர்கள் வெளிநாடு பயணம் செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

தமிழக அரசின் சிம்பிள்ஜிஓவி (SimpleGov) முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவது, அதனை புதுப்பிப்பது ஆகிய செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது, வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வது போன்றவற்றுக்கு தடையில்லா சான்று பெற ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தன.

பாஸ்போர்ட் பெறுதல், புதுப்பிக்கும் நடவடிக்கைகள்உதாரணமாக சொல்ல வேண்டுமெனில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் இருந்து தடையில்லா சான்று (NOC) பெற வேண்டும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பயணத்தின் நோக்கம் என்ன, எந்த நாட்டிற்கு செல்கிறார், எவ்வளவு நாட்கள் வெளிநாட்டில் செலவிடுகிறார் போன்றவற்றின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்

இந்நிலையில் சாதாரண பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன், குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதை பூர்த்தி செய்து புதிய பாஸ்போர்ட் பெறவும் அல்லது பழைய பாஸ்போர்ட் புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம். 

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பாஸ் போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், பின்னர் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்ப வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழ் கிடைத்ததும் வெளிநாட்டிற்கு அரசு ஊழியர் பயணம் செல்ல முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அரசு ஊழியர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, அரசின் அனுமதி பெறாமல் அங்கு வேலை தேடக்கூடாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்களை (அடையாளச் சான்று, முகவரிச் சான்று) டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். ஒருவேளை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மேலும் விவரங்கள் தேவைப்படும் சுழலில் ஏற்பட்டால், அவசர கால நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட துறை தலைமையே தடையில்லா சான்று அல்லது அடையாள சான்றிதழ் அல்லது இரண்டையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback