Breaking News

சட்டபேரையில் 8 முக்கிய அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 சட்டமன்றத்தில் 8 முக்கிய அறிவிப்புகள் வெளியிட்ட ஸ்டாலின் முழு விவரம்



கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்' கீழ் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் 1 இலட்சம் வீடுகள் கட்டப்படும்.

ரூ.1,088 கோடி செலவில் கூடுதலாக 2,200 கிலோமீட்டர் கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்படும்.‘

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் மேலும் 1.80 லட்சம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்; இதற்கான விழா 04.02.2026 அன்று நடைபெறும்.

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களின் ஓய்வூதியம் ரூ.3,400 ஆகவும், பணி நிறைவுத் தொகை ரூ.2 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.

குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களின் ஓய்வூதியம் ரூ.3,200 ஆக உயர்த்தப்படும்.

அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்களின் ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்.

சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் மற்றும் ரூ.20,000 இறுதிச் சடங்கு உதவி வழங்கப்படும்.

அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத் தேர்வுகளில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கடந்த 5 ஆண்டுகால வளர்ச்சியைப் பார்த்து அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு கூடுதல் நம்பிக்கை இருக்கிறது. உறுதியாக சொல்கிறேன் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்" என்று பேசினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback