புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை(ஜன. 28) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
புதுக்கோட்டை அருகே திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை(ஜன. 28) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
புதுக்கோட்டை மாவட்டம்:-
நாளை புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக (28-01(2026) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது! மேலும் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 7ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கரூர் மாவட்டம் கரூர் வட்டம்
அதேபோல் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி நன்னீராட்டு விழாவை முன்னிட்டு ஜன.28-ம் தேதி கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.7-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் அமைந்து உள்ள புகழ் பெற்ற அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டும் நாளை, ஜனவரி 28 ஆம் தேதி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை அறிவிக்கப்பட்டு உள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 7 ஆம் தேதி வழக்கமான வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags: தமிழக செய்திகள்
%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..png)