இன்றைய முக்கிய செய்திகள் HEADLINES TODAY
HEADLINES TODAY
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் | பெறாத வாக்காளர்கள், 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களுக்காக சென்னையில் டிச. 20 (இன்று), 21 ஆகிய 2 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி - மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் .சென்னை மாநகராட்சி அறிவிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
ELECTIONS.TN.GOV.IN/SIR_2026.ASPX,
VOTERS.ECI.GOV.IN,
ELECTORALSEARCH.ECI.GOV.IN
ஆகிய இணையதளங்களின் வழியாக உறுதி செய்யலாம். EROLLS.TN.GOV.IN/ASD/என்ற தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். பட்டியலில் இடம் பெறாதவர்கள் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்தால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 18ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
SIRக்கு பிறகு தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல். 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி பயணம். நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1 லட்சம் பேர் நீக்கம். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் வெறும் 26,000 பேர் மட்டுமே நீக்கம்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம். மூன்றில் ஒருவருக்கு வாக்குரிமை பறிபோனதால் அதிர்ச்சி.
திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களை ஓடவிடும் இயக்கம் தான் திமுக. புதுப்புது அடிமைகளோடு கூட்டணி அமைப்பவர்களை விரட்ட வேண்டும் -துணை முதலமைச்சர் பேட்டி.
100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றான புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி போராட்டம் அறிவிப்பு. சென்னையிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் வரும் 24-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க ஏற்பாடு
சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 90% உயர்ந்துள்ளதாக தகவல் ஒரு மாதத்தில் மட்டும் 2.2 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு
தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி வரை குளிர் அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் தகவல் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 4 செல்சியஸ் வரை குறைய வாய்ப்பு
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டித் தொடரை கைப்பற்றியது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றது.
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்குத் தடை விதிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம். இரு இன நாய்களையும் புதிதாக வாங்கி வளர்த்தால் உரிமையாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர்காற்று. தலைநகரில் காற்று மாசில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணி மும்முரம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. 19 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் எட்டு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்
வங்கதேச மாணவர் தலைவர் மரணத்தால் மீண்டும் வெடித்த கலவரம். பத்திரிகை அலுவலங்களுக்கு தீவைப்பு; நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் தீவிரம்
ஜனவரி 5ஆம் தேதிக்குள் அரசியல் கூட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். கட்சிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து விரைவில் வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி. அகமதாபாத்தில் நடந்த கடைசிப் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று வெளியாகும் என தகவல். சூர்யகுமார் தலைமையிலான அணியில் யார், யார் இடம்பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Tags: தமிழக செய்திகள்
