Breaking News

கலைஞர் மகளிர் உரிமை தொகை: உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படால் மேல்முறையீடு செய்வது எப்படி? kalaignar magalir urimai thittam apply online

அட்மின் மீடியா
0

கலைஞர் மகளிர் உரிமை தொகை: உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படால் மேல்முறையீடு செய்வது எப்படி? kalaignar magalir urimai thittam apply online

தமிழகத்தில் திமுக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 1.13 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுவரும் நிலையில், புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியான சுமார் 17.20 லட்சம் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இதற்கிடையில், புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியிருந்தும் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதும் பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

அதன்படி, நிராகரிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், முதல் கட்டத்திலோ அல்லது இரண்டாம் கட்டத்திலோ தகுதியிருந்தும் பணம் வரவு வைக்கப்படாத பெண்கள், தங்கள் பகுதி கோட்டாட்சியரை அணுகி மேல்முறையீடு செய்வதன் மூலம், இந்தத் திட்டத்தின் பயனைப் பெற மேலும் ஒரு வாய்ப்பு இருப்பதாகத் தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

மேல்முறையீடு செய்வது எப்படி?

 குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய்கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். 

மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். 

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும். 

புகார்கள் வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback