Breaking News

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் - அனுமதிக்காதது ஏன் அமைச்சர் ரகுபதி விளக்கம்

அட்மின் மீடியா
0

திருப்பரங்குன்றத்தில்  தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் - அனுமதிக்காதது ஏன் அமைச்சர் ரகுபதி விளக்கம்




திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்​க​மாக உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் முன்பாகவே தீபம் ஏற்​றப்​படும். ஆனால்  (இந்து மக்கள் கட்சித் தலைவர்) திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

காலங்காலமாக உள்ள நடைமுறைப்படி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தர்கா அருகில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கம் இட்டனர். தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 காவலர் காயம் அடைந்துள்ளார். அசாதாரண சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கினை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசுத் தரப்பில், திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை.நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம். ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது.இது சட்டவிரோதமானது” என வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதம் முடிந்த நிலையில் தமிழக அரசு தரப்பின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது

அதன்படி மீண்டும் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுதாரர் (இந்து மக்கள் கட்சித் தலைவர்) திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும்.

உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

நீதிமன்ற அனுமதியின் பேரில் தீபத்தூணில் தீபமேற்ற சென்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை . இதற்கு எதிராக திருப்பரங்குன்றம் மலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன என அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார். 

சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று விரும்புபவர் ஸ்டாலின். சட்டத்தை மதிப்பவர்கள் நாங்கள். அவர்கள் தான் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காதவர்கள். திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சினையை உருவாக்குகிறார்கள் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு 2014ல் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக யாரும் தடை வாங்கவில்லை; மேல்முறையீடும் செய்யவில்லை. அப்படி இருக்கையில் இப்போது எப்படி தனி நீதிபதியின் உத்தரவை செயல்படுத்த முடியும்? 2014ல் இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பின்படி நாங்கள் நடக்கிறோம். எப்போதும் போல, அங்கு தீபம் ஏற்றப்பட்டது என கூறினார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback