திருப்பரங்குன்றம் சர்ச்சை இதுவரை நடந்தது என்ன?
திருப்பரங்குன்றம் சர்ச்சை இதுவரை நடந்தது என்ன?
திருப்பரங்குன்றம் மலை மதுரை மாவட்டத்தில் உள்ள புராதனமான புனிதத் தலம். முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு இது
மலை அடிவாரத்தில் முருகப்பெருமான் திருக்கோயில் (முதல் படை வீடு).
மலையின் நடுப்பகுதியில் “தீபத்தூண்”(Deepa Thoon / Fire Pillar) எனப்படும் பாரம்பரிய தீபஸ்தம்பம் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்குதான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் இந்தியாவின் மாபெரும் நில அளவைப் பணி நடத்தப்பட்டபோது, மலையில் ஒரு குறியீட்டுக் கல்லை நட்டு வைத்தார்கள்
19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மலை உச்சியில் பிள்ளையார் கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர், முந்தைய தீபத்தூணைவிட உயரமான இடத்தில் இருப்பதால், கார்த்திகை தீபம் இங்கே ஏற்றப்பட்டு வருகிறது.
மலையில் தனியாக சிக்கந்தர் தர்கா (Sikkandar Dargah) உள்ளது. இது இஸ்லாமிய புனிதத் தலமாகும்.
சர்ச்சை என்ன?
திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பாகவே தீபம் ஏற்றப்படும். ஆனால் (இந்து மக்கள் கட்சித் தலைவர்) திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
காலங்காலமாக உள்ள நடைமுறைப்படி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தர்கா அருகில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கம் இட்டனர். தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 காவலர் காயம் அடைந்துள்ளார். அசாதாரண சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேல்முறையீடு:-
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கினை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை.நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம். ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது.இது சட்டவிரோதமானது” என வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதம் முடிந்த நிலையில் தமிழக அரசு தரப்பின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது
அதன்படி மீண்டும் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுதாரர் (இந்து மக்கள் கட்சித் தலைவர்) திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும்.
உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன என அமைச்சர் ரகுபதி விளக்கம்
சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று விரும்புபவர் ஸ்டாலின். சட்டத்தை மதிப்பவர்கள் நாங்கள். அவர்கள் தான் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காதவர்கள். திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சினையை உருவாக்குகிறார்கள் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு 2014ல் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக யாரும் தடை வாங்கவில்லை; மேல்முறையீடும் செய்யவில்லை. அப்படி இருக்கையில் இப்போது எப்படி தனி நீதிபதியின் உத்தரவை செயல்படுத்த முடியும்? 2014ல் இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பின்படி நாங்கள் நடக்கிறோம். எப்போதும் போல, அங்கு தீபம் ஏற்றப்பட்டது என கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
நூறு வருடமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்சனை மற்றபடி கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது
மேலும் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் தர்கா அமைந்துள்ள இடத்திலிருந்து 15 மீட்டர் மட்டுமே தொலைவில் உள்ள இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் தமிழ்நாட்டில் சட்டமன்ற பிரச்சனையை ஏற்பட்டிருக்கிறது எனவும் தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது. பாரம்பரியத்தின் படி நேற்று மலையில் எப்போதும் போல தீபம் ஏற்றப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்

