திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது
நூறு வருடமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்சனை மற்றபடி கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது
மேலும் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் தர்கா அமைந்துள்ள இடத்திலிருந்து 15 மீட்டர் மட்டுமே தொலைவில் உள்ள இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் தமிழ்நாட்டில் சட்டமன்ற பிரச்சனையை ஏற்பட்டிருக்கிறது எனவும் தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது. பாரம்பரியத்தின் படி நேற்று மலையில் எப்போதும் போல தீபம் ஏற்றப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
