Breaking News

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்..!!

அட்மின் மீடியா
0

 பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்..!!



பிரபல மலையாள நடிகர், திரைக்கதையாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஸ்ரீனிவாசன் (69) கொச்சியில் காலமானார். 4 தசாப்தங்களாக மலையாள சினிமாவின் முக்கிய தூணாக விளங்கிய இவர், சமூக விமர்சனங்கள் கலந்த நகைச்சுவை படங்களுக்கு பெயர் பெற்றவர். சந்தேசம், நாடோடிக்காட்டு போன்ற பல கிளாசிக் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.கொச்சி திரிபுனித்துரா தாலுகா மருத்துவமனையில் இன்று (டிச., 20) அவரது உயிர் பிரிந்தது. 1976ஆம் ஆண்டு 'மணிமுழக்கம்' திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமாக இவர், மோகன்லால், மம்முட்டி, திலீப் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்..இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback