வீடு, நிலம் வாங்க, விற்க ரிஜிஸ்டர் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு செய்யலாம் - விரைவில் புதிய நடைமுறை
வீடு, நிலம் வாங்க, விற்க ரிஜிஸ்டர் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு செய்யலாம் - விரைவில் புதிய நடைமுறை
பத்திரப்பதிவு நடைமுறையை மேலும் எளிதாக்கும் வகையில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 'ஸ்டார் 3.0' என்ற புதிய திட்டத்தை பத்திரப்பதிவுத்துறை உருவாக்கி இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள், பத்திரப்பதிவு சேவைகளை விரைவாகவும், வீட்டில் இருந்தபடியேவும் பெற முடியும்.
அதாவது புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், மனைகளை வாங்குவது, விற்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம். பத்திரப்பதிவுக்கான சொத்துக்களை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் பெயர், முகவரி, உள்ளிட்ட விவரங்களை புதிய மென்பொருளில் உள்ளீடு செய்தால் போதும். அது தானாகவே பத்திரங்களை உருவாக்கி விடும்.
ஆதார் எண்ணை பதிவு செய்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் கேட்கும். அதையும் உள்ளீடு செய்தால் விரல் ரேகை பதிவு செய்தால் போதும், பத்திரப்பதிவை வீட்டில் இருந்தபடியே 10 நிமிடங்களில் செய்து முடித்து விடலாம்.
மேலும் பல வசதிகள் உடன் கூடிய இந்த நடைமுறையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்க இருக்கிறார்.
Tags: தமிழக செய்திகள்
