பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியது என்ன முழு விவரம் இதோ
பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியது என்ன முழு விவரம் இதோ
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செயற்குழு மற்றும் பொதுக்குழுவை வழிநடத்துவார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பின்பு கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது:
தீய சக்தி திமுகவை அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காக, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை கட்சியை கட்டி காத்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரிய தலைவர்களுக்கு வாரிசு இல்லை. நாட்டு மக்களை தான் வாரிசாக பாரத்தார்கள். எண்ணற்ற திட்டங்களை கொண்டு வழங்கிய காரணத்தினால் தான், இன்றைக்கும் அதிமுகவை எவராலும் தொட்டு பார்க்க முடியவில்லை.
அதிமுகவின் வெற்றி வாய்ப்பிற்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஏழை எளிய மக்கள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளிகள் என அனைத்துத் தரப்பினருக்காகவும் திட்டங்களைக் கொண்டு வந்து சாதித்த தலைவர்கள் நம் இருபெரும் தலைவர்கள் (எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா). அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான் ஏழைகள், மகளிருக்குக் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு என அற்புதமான திட்டங்கள் கிடைத்தன.""அதிமுக இருக்கின்ற காரணத்தில்தான் ஊடகமும் பத்திரிகையும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற நிலை உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் வாரிசுகள் இல்லை. அவர்கள் நாட்டு மக்களையே வாரிசாகப் பார்த்தார்கள்,
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் aiadmk general body meeting 2025
https://www.adminmedia.in/2025/12/16-aiadmk-general-body-meeting-2025.html
சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நான் முதலமைச்சரானபோது, அதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில், தி.மு.க.வினர் என் மேஜை மீது ஏறி நடனம் ஆடினார்கள். சபாநாயகரை இழுத்துத் தள்ளி அவரது இருக்கையில் அமர்ந்தார்கள். அவரது மைக் உடைக்கப்பட்டது. அப்படிப்பட்ட கொடுமையான நிகழ்வை ஏற்படுத்தியவர் இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சட்டையைக் கிழித்து வீதியில் நின்றவர் இன்றைய முதல்வர். அன்று சட்டையைக் கிழித்துதான் வெளியே சென்றீர்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்,
மு.க.ஸ்டாலின் விபரம் தெரியாமல் பேசி வருவதாக விமர்சித்த ஈபிஎஸ், பொதுமக்கள் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேறு மாதிரியும் வாக்களிப்பார்கள் என்ற தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, "2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றோம். 2024 அதிமுக கூட்டணி வாங்கிய வாக்கு அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் 23.5 சதவீதம் வாக்கு வாங்கி உள்ளது. பாஜக 18 சதவீதம் வாக்கு வாங்கியது. மொத்தம் 41.33 சதவீதம் வாக்கு உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் 32 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தோம். தற்போது தேர்தல் நெருங்குவதால் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது.
மின் கட்டணத்தைக் கேட்டால் ஷாக் அடிக்கிறது என்று கூறிய ஸ்டாலின், அதனை ஆண்டுக்கு 5% உயர்த்தினார். இப்போது, கரண்டு பில்லைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது.
தமிழக மக்கள் லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டசபை தேர்தலுக்கு வேறு மாதிரியும் ஓட்டளிப்பார்கள்.பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது என்பதை தாண்டி, அதிமுகவை நோக்கி என்ன சொல்ல முடியும்? அதிமுக ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலின் ஒரு குறை சொல்ல முடியுமா? அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது முதல்வர் ஸ்டாலின் எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை.
கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அதிமுக ஆட்சி அமைந்த பிறகு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.வெள்ளை காகிதம்இன்று திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. திமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை; அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறக்கின்றனர். பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கப்பட்டதாக பொய்யை பேசி, பேசி திமுக உண்மையாக்க பார்க்கிறது. தமிழகத்திற்கு கிடைத்த முதலீடுகள் பற்றி கேட்டால் அமைச்சர் வெள்ளை காகித்தை காட்டுகிறார்
பாஜவிற்கு நாங்கள் அடிமை என்று ஸ்டாலின் சொல்கிறார். அதிமுக யாருக்கும் எப்போதும் அடிமையாக இருந்தது இல்லை. காங்கிரஸ் இடம் அடிமையாக இருந்தது திமுக தான். காங்கிரஸ் தந்த கூட்டணி அழுத்தத்துக்கு பணிந்தது யார்? கருணாநிதி சொத்தாகிவிட்டது திமுக. திமுக இன்று கார்பரேட் கட்சியாகி விட்டது. துரைமுருகனை ஏன் துணை முதல்வர் ஆக்கவில்லை? திமுகவை போல் அல்ல அதிமுக. அதிமுக தொண்டர்களின் கட்சி. விசுவாசமாக உழைப்போருக்கு தேர்தலில் வாய்ப்பு உள்ளது. அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.
அதிமுக ஜனநாயக இயக்கம். உச்சபட்ச பதவிக்கு வர முடியும். அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்கினோம். வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அதிமுக பலமான கட்சி. வலுவான கூட்டணியை அமைக்கும். தேர்தல் அறிவிப்பு வந்ததும் நல்ல கூட்டணி அமையும். கவலைப்படாதீர்கள். கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர். தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
Tags: அரசியல் செய்திகள்