Breaking News

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது!

அட்மின் மீடியா
0
திருப்பரங்குன்றம் மலையில் ஏற முற்பட்ட நைனார் நாகேந்திரனை போலீஸ் கைது செய்தனர். 

மேலும், கோயில் முன்பு திரண்டிருந்த பாஜக, இந்து முன்னணியினரும் கைது செய்யப்பட்டனர். 

நீதிமன்ற அனுமதியின் பேரில் தீபத்தூணில் தீபமேற்ற சென்றவர்களுடன் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இரவு 10:30-க்குள் தீபம் ஏற்றிவிட்டு, அதுகுறித்து நாளை காலைக்குள் அறிக்கை தர போலீஸுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபமேற்றச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிராக திருப்பரங்குன்றம் மலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

16 கால் மண்டபம் அருகே தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கலைய மறுத்ததால் காவல்துறையினர் கைது செய்தனர். 


Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback