Breaking News

05.12.2025 இன்றைய காலை தலைப்புச் செய்திகள் today headlines

அட்மின் மீடியா
0
05.12.2025 இன்றைய காலை தலைப்புச் செய்திகள் today headlines



திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. மாற்று இடத்தில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டதே பிரச்சனைக்கு காரணம் என குற்றச்சாட்டு.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாத சக்திகளுக்கு எடப்பாடி பழனிசாமி துணை போகிறார். 2014-ல் ஜெயலலிதா பெற்ற தீர்ப்புக்கு புறம்பாக செயல்படுவதாகவும் அமைச்சர் ரகுபதி கண்டனம்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்! திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் 

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டும், அதனை நிறைவேற்றாமல் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை அரசு கைது செய்திருப்பது கண்டனத்திற்குறியது -எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 93 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.சட்டவிரோதமாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது பொது அமைதி பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் மேலும் ரூ.4,491 கோடி முதலீடு செய்யும் வின்பாஸ்ட் நிறுவனம். தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை - நக்சலைட்கள் இடையே 2வது நாளாக தொடரும் துப்பாக்கிச் சண்டையில் 18 நக்சலைட்கள் சுட்டுக்கொலை. பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது

எஸ்.ஐ.ஆர். பணிகளால் தமிழ்நாட்டில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல். இதுவரை 5.18 கோடி கணக்கீடு படிவங்கள் மட்டுமே இணையத்தில் பதிவேற்றம்.

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரள கோவில்களில் பவுன்சர்களை நியமிக்கக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. கோவில்களில் பாதுகாப்பு-கூட்டத்தை கட்டப்படுத்துவது காவல்துறை மற்றும் தேவசம்போர்டின் பொறுப்பு என்றும் பவுன்சர்களை நியமிப்பது தவறான நடைமுறை என்றும் மனுதாரர் வாதிட்டிருந்தார்

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினை விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி. இன்று இந்தியா - ரஷ்ய இடையேயான 23வது வருடாந்திர மாநாடு நடைபெற உள்ளது.

மத்திய அரசு முன்மொழிந்துள்ள சுகாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பு செஸ், அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்படாது, மாறாக பான் மசாலா போன்ற பொருட்கள் மீது விதிக்கப்படும். இதன் வருவாய் சுகாதாரத் திட்டங்களுக்காக மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும் -மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு செஸ் விதிப்பால் ஜிஎஸ்டி-யில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, பான் மசாலா மீது கலால் வரி விதிக்க முடியாததால், உற்பத்தி நிலையில் வரி விதிக்க இந்த தனி  செஸ் மசோதா என விளக்கம்

திருத்தணியைச் சேர்ந்த சக்திவேல் (30) இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்து, காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணியாற்றி வந்தார் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார்.வீரமரணம் அடைந்த சக்திவேலுக்கு தேவஸ்ரீ (26) என்ற மனைவியும், ஆஷிகா செர்லின் (4) என்ற மகளும், லெனின் அக்ரன் (2) என்ற மகனும் உள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback