இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வைரல் வீடியோ sri lanka flood video
இலங்கையில் பெய்துவரும் கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வைரல் வீடியோ sri lanka flood video
இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
அப்போது கும்புக்கனை நகர சாலையில் சென்ற ஒரு பஸ்சை வெள்ளம் அடித்துச் சென்றது.தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் பஸ்சை மீட்டு பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.
மேலும் அம்பாறை பகுதியில் கார் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் இறந்தனர்.இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர்.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிகமாக தங்க வைக்க கொழும்பில் அமைந்துள்ள பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்(R.premadesa stadium) அவசர பேரிடர் நிவாரண மையமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அனுராதபுரத்தில் கலா வவி நீர்மட்டம் திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி நேற்று முதல் ஒரு தென்னை மரத்தில் தஞ்சம் பெற்று உயிர் தப்பியிருந்த நபரை இலங்கை விமானப்படை இன்று காலை அதிரடியாக மீட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1994396207800857057
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1994395621030346829
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1994395293924970545
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1994394743661580543
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1994394029061243201
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
