Breaking News

துபாயில் உலகின் முதல் கார்பன்-நியூட்ரல் மசூதி சிறப்பம்சங்கள் என்ன என்ன வீடியோ இணைப்பு al rayan mosque in hatta video

அட்மின் மீடியா
0

துபாயில் உலகின் முதல் கார்பன்-நியூட்ரல் மசூதி... என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?!By Seetha Nov 12, 2025, 09:00 ISTதுபாய் கார்பன் மசூதி

துபாயில் உள்ள அல்-ரையான் மசூதி (Al Rayyan Mosque) உலகின் முதல் கார்பன்-நடுநிலை மசூதி ஆகும், இது US Green Buildings Council-இன் LEED Zero Carbon சான்றிதழைப் பெற்றுள்ளது. 


துபாய் மின்சாரம் மற்றும் நீர் வாரியத்தால் (DEWA) கட்டப்பட்ட இந்த மசூதி, நிலையான கட்டிடக்கலைக்கான ஒரு புதிய தரத்தை நிறுவுகிறது.

இந்த மசூதி அதன் வருடாந்திர கார்பன் வெளியேற்றத்தில் 175% ஐ ஈடுசெய்வதன் மூலம் இதை அடைந்துள்ளது

பிரம்மிக்க வைக்கும் கட்டிட கலை. சுத்தமான பராமரிப்பு, பிரம்மாண்டம் என்று பள்ளிவாசலில் செய்யப்பட்டிருக்கிற வசதிகள் ஆச்சர்யப்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் உலகத்துக்கே முன்னுதாரணமாக, துபாயின் ஹட்டா பகுதியில் உள்ள அல் ரய்யான் பள்ளிவாசல் உலகின் முதல் கார்பன்-நியூட்ரல் பள்ளிவாசல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.மேலும் முன்னதாக, 2021ம் ஆண்டு இந்த பள்ளிவாசல் LEED Platinum சான்றிதழையும், 2024ல் LEED Zero Energy விருதையும் பெற்றது. 

பள்ளிவாசலின் சிறப்பம்சம்:-

அதிநவீன சோலார் சக்தி அமைப்பு மூலம் தன்னுடைய மின்சாரத் தேவையின் 150% மின்சாரத்தை உற்பத்தி செய்து கூடுதல் ஆற்றலை மின்வலையமைப்புக்கு வழங்கி வருகிறது.

சுமார் 1,050 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது இந்த பள்ளிவாசல், 

600க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தொழுகை செய்யலாம்

பள்ளிவாசலில் மழைநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகின்ரது

அதேபோல் அங்கு வரும் தொழுகையாளிகளி, மின்சார வாகனத்தை சார்ஜிங் செய்யும் வசதியும் உள்ளது

உயர்தர காற்று சுத்திகரிப்பு அமைப்பு, மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டமைப்பு பொருட்கள் உள்ளிட்டவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை-நேர்மறை வடிவமைப்பில் வழிபாட்டுத் தலங்கள் எவ்வாறு வழிவகுக்கும் என்பதற்கு 2025 சான்றிதழ் ஒரு முன்னோடி எடுத்துக்காட்டாக நிற்கிறது" என்று துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதியின் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=Idb9IiVJlzY

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html

Tags: மார்க்க செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback